நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏகேபிஸ் தளபதியின் வாகனத்தை சுட்ட சந்தேக நபர் கைது

கோலாலம்பூர்: 

புக்கிட் காயு ஹித்தாமில் உள்ள எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை (AKPS) தளபதியின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர், டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.

நேற்று காலை 5.40 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், மூத்த உதவி ஆணையர் முஹம்மத் நாசருடின் எம். நாசிர் ஓட்டிச் சென்ற புரோட்டான் X70 காரைப் பல முறை துப்பாக்கியால் சூட்டுள்ளனர்.

எல்லைப் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் அமலாக்கப் படையினரைப் பயமுறுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் போலீஸார் நம்புகின்றனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset