செய்திகள் மலேசியா
வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்
ரவுப்:
இங்குள்ள கம்போங் பாமா கூலாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கருகி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு இன்று அதிகாலை 3.35 மணிக்கு தகவல் கிடைத்ததாக ரவுப் மாவட்ட காவல் துறை தலைவர், சூப்பிரிண்டெண்ட் முஹம்மத் ஷஹ்ரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
“தீயணைப்பு பணிகள் முடிந்ததும், சம்பவ இடத்திலேயே அனைத்து பாதிக்கப்பட்டவர்களையும் கண்டறிந்தோம்,” என்றார் அவர்.
அனைத்து உடல்களும் மேலதிக விசாரணைக்காக ரவுப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தீயணைப்பு குழுவினர் காலை 4.15 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், 4.48 மணிக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் பஹாங் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர், டத்துக் முஹம்மத் ரஸாம் தாஜா ரஹிம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்தில் வீடு முழுமையாக சேதமடைந்ததுடன், மூன்று கார்கள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து நாசமாகின.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 4:47 pm
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வட்டாரக் கூட்டங்கள் பிப். 28 முதல் நடைபெறும்: டத்தோ சகாதேவன்
February 26, 2026, 4:36 pm
கிளந்தானில் இருந்து பலர் பாலினம் மாற்றினார்களா?: குற்றச்சாட்டை ஆய்வு செய்யும் அரசு
February 26, 2026, 4:33 pm
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா பரிசு: குறைந்தபட்சம் RM1,000 வழங்க அரசு அறிவிப்பு
February 26, 2026, 4:28 pm
3ஆர் விவகாரம் பரவாமல் இருக்க பல்கலைக்கழக மாணவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 26, 2026, 3:40 pm
ரமலான் சந்தைகளில் வெளிநாட்டவர் செய்யும் வியாபாரம்: குடிநுழைவு துறை கண்காணிப்பு தீவிரம்
February 26, 2026, 2:36 pm
அமைதியும் முன்னேற்றமும் தான் மக்களின் விருப்பம்: அன்வார் இப்ராஹிம்
February 26, 2026, 1:05 pm
புக்கிட் பிந்தாங்கில் பரபரப்பு: தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் மோதலில் குடியேற்ற அதிகாரியின் கால் முறிவு
February 26, 2026, 1:03 pm
மதப் பிரச்சார நடவடிக்கைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்: ஹன்னா இயோ வலியுறுத்தல்
February 26, 2026, 1:01 pm
