நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2027 கல்வித் திட்டம்: தொடக்கப் பள்ளிகளில் கணிதப் பாட நேரம் அதிகரிப்பு

கோலாலம்பூர்: 

2027 கல்வித் திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் பாடத்திற்கான கற்பித்தல் நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாக மலேசியா கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய 576 மணிநேரத்திலிருந்து, மொத்தமாக 608 மணிநேரமாக உயர்த்தப்பட உள்ளது.

இந்த மாற்றத்தின் படி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்திற்கு மூன்றரை மணிநேரமும், இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தலா மூன்று மணிநேரமும் கணிதப் பாடம் கற்பிக்கப்படும். 

இதன் மூலம் கணிதத்தை ஆழமாகப் புரிந்து, அன்றாட வாழ்வில் பயன்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், கூடுதல் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த இந்த நேர உயர்வு உதவும் என்றும் கூறப்பட்டது. மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் முன், அடிப்படை வாசிப்பும், கணிதத் திறன்களை உறுதி செய்ய சிறப்பு பயிற்சித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதனிடையே, 2024-ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வில் கூடுதல் கணிதப் பாடத்தை எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட சிறிதளவு குறைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது.

அறிவியல், தொழில்நுட்பம், கணிதப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் கூறியது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset