செய்திகள் மலேசியா
அமைதியும் முன்னேற்றமும் தான் மக்களின் விருப்பம்: அன்வார் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
மலேசிய மக்கள் பெரும்பான்மையாக அமைதியான, பொருளாதார முன்னேற்றம் கொண்ட, பல்வேறு பண்பாடுகள் இடையே பரஸ்பர மரியாதை நிலவும் நாட்டையே விரும்புகின்றனர் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
நாட்டில் குழப்பம் ஏற்படுத்தி, ஒவ்வொரு விடயத்திலும் பிரச்சினையைத் தூண்ட இயலும் குழுக்கள் மிகச் சிறிய தொகையினரே என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் நிலைத்தன்மையான வளர்ச்சிக்கு நல்ல நிர்வாகமும், பல இன மக்களிடையே பரஸ்பர மரியாதையும் அடித்தளமாக இருக்க வேண்டும் என பிரதமர் கூறினார்.
மேலும், அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தேசிய மொழியான மலாய் மொழியின் நிலை எப்போதும் உறுதியானதே என்றும், அதே நேரத்தில் ஆங்கிலம், சீன மொழிகள் உள்ளிட்ட பிற மொழிகளில் திறனை மேம்படுத்துவது நாட்டிற்கு பயனளிக்கும் நடவடிக்கை என்றும் அன்வார் விளக்கினார்.
இஸ்லாம் மலேசியாவின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தாலும், அரசியலமைப்பின் அடிப்படையில் அனைத்து இனத்தவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றும் உரிமை பெற்றுள்ளனர் எனவும் அவர் நினைவூட்டினார்.
- கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 4:47 pm
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வட்டாரக் கூட்டங்கள் பிப். 28 முதல் நடைபெறும்: டத்தோ சகாதேவன்
February 26, 2026, 4:36 pm
கிளந்தானில் இருந்து பலர் பாலினம் மாற்றினார்களா?: குற்றச்சாட்டை ஆய்வு செய்யும் அரசு
February 26, 2026, 4:33 pm
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா பரிசு: குறைந்தபட்சம் RM1,000 வழங்க அரசு அறிவிப்பு
February 26, 2026, 4:28 pm
3ஆர் விவகாரம் பரவாமல் இருக்க பல்கலைக்கழக மாணவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 26, 2026, 3:40 pm
ரமலான் சந்தைகளில் வெளிநாட்டவர் செய்யும் வியாபாரம்: குடிநுழைவு துறை கண்காணிப்பு தீவிரம்
February 26, 2026, 1:05 pm
புக்கிட் பிந்தாங்கில் பரபரப்பு: தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் மோதலில் குடியேற்ற அதிகாரியின் கால் முறிவு
February 26, 2026, 1:03 pm
மதப் பிரச்சார நடவடிக்கைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்: ஹன்னா இயோ வலியுறுத்தல்
February 26, 2026, 1:03 pm
வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்
February 26, 2026, 1:01 pm
