நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் பிந்தாங்கில் பரபரப்பு: தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் மோதலில் குடியேற்ற அதிகாரியின் கால் முறிவு

கோலாலம்பூர்: 

இன்று அதிகாலை புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் மலேசிய குடிநுழைவுத் துறை நடத்திய அமலாக்க நடவடிக்கையின்போது தப்பிக்க முயன்ற ஒரு வெளிநாட்டவர் மோதியதால் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

அதிகாலை 3.15 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதன் காரணமாக, அதிகாரியின் இடது கால் முறிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகக் குடிநுழைவுத் துறை அமலாக்கப் பிரிவு இயக்குநர் பாஸ்ரி ஒத்மான் தெரிவித்தார்.

“அச்சூழ்நிலையில், வளாகத்தின் படிக்கட்டுகளில் சந்தேகநபர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் எங்கள் அதிகாரி கீழே விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது சீரான நிலையில் உள்ளார்,” என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் 85 அதிகாரிகளும் பணியாளர்களு ஈடுபட்டிருந்தனர், அதில் 15 பேர் சிறப்பு தந்திரோபாயப் படையைச் (PASTAK) சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

98 வெளிநாட்டவர்களைச் சோதனை செய்ததில், 48 பேர் அதிக காலம் தங்கியிருத்தல், செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை வழங்கத் தவறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மியான்மர், தாய்லாந்து, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதே நடவடிக்கையின் போது மாணவர் அனுமதி சீட்டை தவறாக பயன்படுத்தி டிஜே ஆக பணியாற்றியதாக சந்தேகத்தின் பேரில், நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

“அவர்கள் குடிநுழைவு விதிமுறைகள் 1963ன் விதி 39(b)ன் கீழ், அனுமதி சீட்டின் நிபந்தனைகளை மீறியதாக கண்டறியப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

பாஸ்ரி கூறுகையில், சோதனையின் போது பலர் மதுபானம் அருந்தியதால் மயக்க நிலையில் இருந்ததாகப்  பாஸ்ரி தெரிவித்தார்.

அனைத்து கைதிகளும் மேலதிக விசாரணை, சட்ட நடவடிக்கைக்காக புத்ராஜெயா குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset