செய்திகள் மலேசியா
ஈரானில் இருந்து திரும்பி வர மறுக்கும் மலேசியர்கள்: முஹம்மத் ஹசன்
கோலாலம்பூர்:
மலேசியா நாட்டைச் சேர்ந்த 13 பேர் இன்னும் ஈரான் நாட்டில் தங்கியிருப்பதுடன், தாயகம் திரும்ப மறுத்துள்ளனர். இவர்களில் மாணவர்களும் அடங்குவர் என வெளிநாட்டு அமைச்சர் முஹம்மத் ஹசன் தெரிவித்துள்ளார்.
பலமுறை அறிவுறுத்திய போதிலும் அவர்கள் திரும்ப வர மறுத்ததால், தங்களது விருப்பத்தின் பேரில் அங்கு தங்கியிருப்பதாக உறுதிப்படுத்தும் பொறுப்புத் தவிர்ப்பு கடிதத்தில் கையெழுத்திடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டதாக முஹம்மத் கூறினார்.
மீட்பு நடவடிக்கைக்கு அரசு தயாராக இருந்தபோதும், அவர்கள் மறுத்ததால், அதன் விளைவுகளுக்கு அரசை பொறுப்பாக்க முடியாது என்பதே அந்த கடிதத்தின் நோக்கம் எனவும் அவர் விளக்கினார்.
இன்று மக்களவையில், ஈரானில் உள்ள மலேசியர்களுக்கான அவசரத் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதை தெரிவித்தார்.
மேலும், விஸ்மா புத்ரா இரண்டு முறை பயண எச்சரிக்கை வெளியிட்டு, அவசியமில்லையெனில் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் முஹம்மத் கூறினார்.
சமீப காலத்திலும் சிலர் அங்கு சென்றதாகவும், தற்போதைய சூழலில் எந்தவிதமான அபாயமும் ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 1:01 pm
பள்ளிவாசல் உண்டியலைத் திருடிய 17 வயது இளைஞர் உட்பட 4 பேர் கைது
February 26, 2026, 12:59 pm
ஏகேபிஸ் தளபதியின் வாகனத்தை சுட்ட சந்தேக நபர் கைது
February 26, 2026, 12:04 pm
2027 கல்வித் திட்டம்: தொடக்கப் பள்ளிகளில் கணிதப் பாட நேரம் அதிகரிப்பு
February 26, 2026, 11:57 am
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீது போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் அரச விசாரணைக் கோரிக்கை நிராகரிப்பு
February 26, 2026, 10:57 am
சட்டவிரோத குடியேற்றம்: 65 வயது முதியவர் மீது கடும் குற்றச்சாட்டு
February 26, 2026, 9:47 am
அமைச்சகங்களின் செயல்திறன் கண்காணிப்பு தீவிரம்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
February 26, 2026, 7:00 am
பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை தீபகற்ப மலேசியாவில் டீசல், RON97 பெட்ரோல் ஐந்து சென் உயர்ந்துள்ளது
February 25, 2026, 5:37 pm
இஸ்லாம் குறித்து அவமதிப்பான பதிவு: தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழக மாணவர்
February 25, 2026, 5:36 pm
