செய்திகள் மலேசியா
மதப் பிரச்சார நடவடிக்கைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்: ஹன்னா இயோ வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
மத்திய பிரதேசத் துறை, கோலாலம்பூர் மாநகராட்சி சபை (DBKL) மூலம், புக்கிட் பிந்தாங் பகுதியில் நடைபெறும் தக்வா தெரு உள்ளிட்ட அனைத்து மதப் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஹன்னா இயோ, இருப்பினும் இத்தகைய நிகழ்வுகள் அதிகாரிகள் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கோலாலம்பூர் மாநகராட்சி சபை, சம்பந்தப்பட்ட துறைகள், அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு, நிகழ்வுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் மலேசிய இஸ்லாமிய முன்னேற்றத் துறை, மத்திய பிரதேச இஸ்லாமிய மத மன்றம், மத்திய பிரதேச இஸ்லாமிய மதத் துறை ஆகிய அமைப்புகளுடன் கோலாலம்பூர் மாநகராட்சி சபை நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும் விளக்கினார்.
மேலும், மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கம் உடன் இணைந்து, புக்கிட் பிந்தாங் பகுதியில் தக்வா தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பை மேற்கொள்வதாக அவர் கூறினார்.
இஸ்லாம் கூட்டாட்சியின் அதிகாரப்பூர்வ மதமாக இருப்பதை கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட தக்வா நடவடிக்கைகளை கோலாலம்பூரில் எளிதாக்க அரசு உறுதியாக உள்ளது என, மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் ஹன்னா இயோ தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 4:47 pm
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வட்டாரக் கூட்டங்கள் பிப். 28 முதல் நடைபெறும்: டத்தோ சகாதேவன்
February 26, 2026, 4:36 pm
கிளந்தானில் இருந்து பலர் பாலினம் மாற்றினார்களா?: குற்றச்சாட்டை ஆய்வு செய்யும் அரசு
February 26, 2026, 4:33 pm
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா பரிசு: குறைந்தபட்சம் RM1,000 வழங்க அரசு அறிவிப்பு
February 26, 2026, 4:28 pm
3ஆர் விவகாரம் பரவாமல் இருக்க பல்கலைக்கழக மாணவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 26, 2026, 3:40 pm
ரமலான் சந்தைகளில் வெளிநாட்டவர் செய்யும் வியாபாரம்: குடிநுழைவு துறை கண்காணிப்பு தீவிரம்
February 26, 2026, 2:36 pm
அமைதியும் முன்னேற்றமும் தான் மக்களின் விருப்பம்: அன்வார் இப்ராஹிம்
February 26, 2026, 1:05 pm
புக்கிட் பிந்தாங்கில் பரபரப்பு: தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் மோதலில் குடியேற்ற அதிகாரியின் கால் முறிவு
February 26, 2026, 1:03 pm
வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்
February 26, 2026, 1:01 pm
