நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத குடியேற்றம்: 65 வயது முதியவர் மீது கடும் குற்றச்சாட்டு

மஞ்சோங்:

ஏழு இந்தோனேசிய பிரஜைகளை சட்டவிரோதமாக கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முதியவர் ஒருவர், நீதிமன்றமத்தில் தன்னை குற்றமற்றவர் என கூறினார். 

65 வயதுடைய வோன் கிம் ஹோவி, கான்டோனீஸ் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பிறகு இந்த ஒப்புதலை வழங்கினார். நீதிபதி அசிசா அஹமத் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 8.30 மணியளவில், மஞ்சோங் மாவட்டத்தின் பந்தாய் ரெமிஸ் பகுதியில் உள்ள எண்ணெய்ப் பனை தோட்டத்தில், வெள்ளி நிற டொயோட்டா கேம்ரி காரை ஓட்டிச் சென்றபோது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத ஏழு இந்தோனேசியர்களை கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மனிதக் கடத்தல், குடியேற்றக் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் (2007) பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது அதிகபட்சம் இரண்டரை லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

உடல்நலக் குறைவு காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளதால், ஜாமீன் கோரிக்கை அங்கு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset