நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரகசிய ஆயுத ஏற்றுமதியா? காசா போர் காலத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கியதாக இந்தியா மீது குற்றச்சாட்டு

ஜெருசலம்:

காசாவில் போர் நடைபெற்று வந்த காலகட்டத்தில், இஸ்ரேலுக்கு இந்தியா ராக்கெட்டுகளையும், வெடிப்பொருட்களையும் ஏற்றுமதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அல் ஜசீரா பெற்ற ஆவணங்கள், நிறுவனங்களின் அறிக்கைகள் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த அறிக்கைகளின்படி, காசாவில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், இஸ்ரேல் இந்தியாவிலிருந்து ஆயுத விநியோகத்தை பெற்றுள்ளது. 

நீண்ட காலமாக பேச்சுவார்த்தை, அரசியல் உரையாடல் மூலமே மோதல்களை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு இது முரணானதாக இது பார்க்கப்படுகிறது.

இந்த பரிமாற்றங்கள் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு வராமல் நடைபெற்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காசாவில் மனிதாபிமான நெருக்கடி தீவிரமாக நிலவி வரும் சூழலில் ஆயுத ஏற்றுமதியின் விளைவுகள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. பல ஆயிரம் பேரை இஸ்ரேல் கொன்று குவித்ததற்கு ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியுள்ளது இப்போது வெளி வந்துள்ளது.

அதற்கு நன்றி பாராட்டவே நெத்தன் யாஹு அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு இன்று சென்றுள்ளார் என்று ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset