நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீன பள்ளிவாசல் மீது யூதர்களின் தாக்குதல்

கெய்ரோ: 

ரமலான் மாதத்தின் இரண்டாவது வாரத்தில், யூத தீவிரவாதிகள் மேற்கு கரை பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தீவைத்த சம்பவத்தை அரபு நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த தீவிரவாத குழு, அபு பக்கர் அல்-சித்திக் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி, ஹீப்ரு எழுத்துக்களால் சுவர்களில் கிறுக்கி உள்ளனர்.

அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் போது, நாப்லஸ் நகரத்திற்கு அருகிலுள்ள தால், சூரா கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்த அந்த பள்ளிவாசலுக்கு பல பாலஸ்தீன வழிபாட்டாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தீப்பற்றியதையும் அடர்ந்த புகை எழுவதையும் அவர்கள் கண்டனர்.

உள்ளூர் மக்கள் உடனடியாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இருப்பினும், பள்ளிவாசலின் நுழைவாய் பகுதிகள் சில தீக்கிரையாகின.

அரபு நாடுகள் வெளியிட்ட அறிக்கையில், புனித இடங்களை அவமதிக்கும் இத்தகைய செயல்கள் வன்முறையை தூண்டும் ஆபத்தான வளர்ச்சியாகும் என எச்சரித்துள்ளது. இதனால், சர்வதேச அமைதியைப் பாதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், பாலஸ்தீன ஆட்சியின் கீழ் செயல்படும் மத விவகார அமைச்சகம், கடந்த ஆண்டு மேற்கு கரை பகுதியில் சுமார் 45 பள்ளிவாசல்கள் அவமதிப்புச் செயல்களுக்கு இலக்கானதாக தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset