செய்திகள் உலகம்
ஈரானின் நீண்ட தூர ஏவுகணை திட்டம்: டிரம்ப் கடும் குற்றச்சாட்டு
வாஷிங்டன், டி.சி:
கடந்த செவ்வாய்க்கிழமை உலகில் சில நாடுகளிடம் மட்டுமே உள்ள நீண்ட தூர தொழில்நுட்ப ஆயுதமான ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
“ஈரான் ஐரோப்பாவையும் எங்கள் தளங்களையும் அச்சுறுத்தக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கி வருகின்றனர். மேலும், விரைவில் அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகளையும் தயாரிக்க முயற்சித்து வருகின்றனர்,” என்று அவர் தனது யூனியன் உரையில் தெரிவித்தார்.
"தெஹ்ரான் அந்தத் திறனைத் தொடர முடிவு செய்தால்", 2035 ஆம் ஆண்டுக்குள் ஈரான் இராணுவ ரீதியாக சாத்தியமான ஏவுகணையை உருவாக்க முடியும் என்று கூறியது, ஆனால் அத்தகைய முடிவை எடுத்தது ஈரான்தானா என்று கூறவில்லை என 2025 ஆம் ஆண்டில், அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது, ஈரானிடம் சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய குறுகிய, நடுத்தர தூர ஏவுகணைகள் உள்ளன என்று அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை தெரிவித்துள்ளது.
அமேரிக்கா ஈரானின் மேற்கு எல்லையிலிருந்து சுமார் 6,000 மைல்கள் (9,656 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது.
வாஷிங்டனும் டெஹ்ரானும், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளன. இது, டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் கைவிட்ட ஒப்பந்தத்திற்கு மாற்றாக அமைவதாகும்.
மேலும், டிரம்ப், மத்திய கிழக்கில் பெருமளவில் அமெரிக்க படைகளை அனுப்பி வைத்துள்ளார். இதில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள், பல போர் கப்பல்கள், போர் விமானங்கள், பிற ராணுவ உபகரணங்களும் அடங்கும்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் பலமுறை எச்சரித்துள்ளார்.
டெஹ்ரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் நாளை மீண்டும் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 5:35 pm
ரகசிய ஆயுத ஏற்றுமதியா? காசா போர் காலத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கியதாக இந்தியா மீது குற்றச்சாட்டு
February 25, 2026, 5:14 pm
பாலஸ்தீன பள்ளிவாசல் மீது யூதர்களின் தாக்குதல்
February 25, 2026, 4:21 pm
தொடர் மழையால் பாலியில் பெருவெள்ளம்
February 25, 2026, 11:29 am
தடுப்பூசி பரிந்துரைகளை குறைத்ததற்காக, டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 15 மாநிலங்கள் வழக்கு தொடுத்துள்ளன
February 25, 2026, 10:31 am
வாஷிங்டனில் நான்கு பேரை குத்திக் கொன்ற ஆடவர் போலீஸாரல் சுட்டுக் கொல்லப்பட்டார்
February 25, 2026, 10:30 am
வெந்நீர் ஊற்றி கொடூர சித்திரவதை: 21 வயது இளம்பெண் தப்பியோட்டம்
February 24, 2026, 5:31 pm
எல்லைச் சுவருக்காக மக்களின் வீடுகள் பறிப்பு: ட்ரம்ப் அரசின் அதிரடி முடிவு
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
