நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தடுப்பூசி பரிந்துரைகளை குறைத்ததற்காக, டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 15 மாநிலங்கள் வழக்கு தொடுத்துள்ளன

லாஸ் ஏஞ்சல்ஸ்: 

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் கொண்ட 15 மாநிலங்கள், குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிந்துரைகளை குறைத்ததற்கு எதிராக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசை நீதிமன்றத்தில் எதிர்கொண்டுள்ளன.

ஜனவரியில் அமெரிக்க சுகாதாரம், மனிதவளத் துறை அறிவித்த மாற்றத்தின் மூலம், ரோட்டா வைரஸ், இன்ஃப்ளூயன்ஸா, கோவிட்-19 போன்ற நோய்களுக்கு அனைத்து குழந்தைகளும் கட்டாயமாக தடுப்பூசி பெற வேண்டும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது. தற்போது ஏழு தடுப்பூசிகள் குறிப்பிட்ட ஆபத்து உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்த வழக்கை முன்னின்று நடத்தும் கலிஃபோர்னியா மாநில தலைமை சட்ட அதிகாரி ராப் போன்டா, பல தசாப்தங்களாக நிலவி வந்த அறிவியல் ஆய்வுகளையும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் அரசு புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டினார். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளும் வழக்கில் எதிர்க்கட்சியினராக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றம் மருத்துவ சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தடுப்பூசி கொள்கை பிற நாடுகளுடன் ஒத்திசைக்கப்படுவதாகவும், டென்மார்க் நாட்டின் நடைமுறை எடுத்துக்காட்டாகக் கொள்ளப்பட்டதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

டிரம்ப் மீண்டும் பதவியேற்றதற்கு பின்னர் தடுப்பூசிகள் குறித்த சந்தேகம் அதிகரித்துள்ளதாகவும், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தடுப்பூசி பெறும் விகிதம் குறைந்ததால் ஆபத்தான நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset