நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெந்நீர் ஊற்றி கொடூர சித்திரவதை: 21 வயது இளம்பெண் தப்பியோட்டம்

பாலிக்பப்பான்:

தத்தெடுத்த பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான சித்திரவதை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தான் பகுதியில் பதிவாகியுள்ளது.

21 வயதுடைய ‘KH’ என அறியப்படும் இளம்பெண், தத்தெடுத்த தாய் தந்தையால் நீண்ட காலமாக உடல், மன ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாகியதாக கூறியுள்ளார். 

அவரது உடலில் வெந்நீர் ஊற்றப்பட்டதால் ஏற்பட்ட தீக்காயங்கள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் காணப்பட்ட நிலையில், உடல் முழுவதும் கட்டுப்போட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

உள்ளூர் செய்திகளின் படி, அந்த பெண் தனது பதினொரு வயதிலிருந்தே தொடர்ச்சியான சித்திரவதைக்கு உள்ளாகி வந்துள்ளார். இந்த கொடூரம், அவர் அந்த வீட்டிலிருந்து தப்பியோடிய பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.

தப்பிய இளம்பெண்ணை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஐந்து நபர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset