செய்திகள் உலகம்
வாஷிங்டனில் நான்கு பேரை குத்திக் கொன்ற ஆடவர் போலீஸாரல் சுட்டுக் கொல்லப்பட்டார்
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் உயிரிழந்ததுடன், சந்தேகநபர் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பியர்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, டகோமா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு இல்லத்தில் உத்தரவை மீறியதாக கூறப்படும் ஒருவரை பற்றிய தகவல் கிடைத்ததையடுத்து துணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
காலை 9.30 மணியளவில், அந்த நபர் வீட்டின் வெளியே பலரை கத்தியால் தாக்கி வருவதாக பலர் தகவல் தெரிவித்தனர். 9.33 மணியளவில் துணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
இந்த தாக்குதலில் 32 வயதுடைய சந்தேகநபர் உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடுமையாக காயமடைந்த ஐந்தாவது நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 5:35 pm
ரகசிய ஆயுத ஏற்றுமதியா? காசா போர் காலத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கியதாக இந்தியா மீது குற்றச்சாட்டு
February 25, 2026, 5:33 pm
ஈரானின் நீண்ட தூர ஏவுகணை திட்டம்: டிரம்ப் கடும் குற்றச்சாட்டு
February 25, 2026, 5:14 pm
பாலஸ்தீன பள்ளிவாசல் மீது யூதர்களின் தாக்குதல்
February 25, 2026, 4:21 pm
தொடர் மழையால் பாலியில் பெருவெள்ளம்
February 25, 2026, 11:29 am
தடுப்பூசி பரிந்துரைகளை குறைத்ததற்காக, டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 15 மாநிலங்கள் வழக்கு தொடுத்துள்ளன
February 25, 2026, 10:30 am
வெந்நீர் ஊற்றி கொடூர சித்திரவதை: 21 வயது இளம்பெண் தப்பியோட்டம்
February 24, 2026, 5:31 pm
எல்லைச் சுவருக்காக மக்களின் வீடுகள் பறிப்பு: ட்ரம்ப் அரசின் அதிரடி முடிவு
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
