செய்திகள் உலகம்
தொடர் மழையால் பாலியில் பெருவெள்ளம்
டென்பசார்:
பாலி தீவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பெருவெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டென்பசார் நகரின், அருகிலுள்ள நதிகள் கரைபுரண்டு ஓடியதால் பல குடியிருப்பு பகுதிகள் திடீர் வெள்ளத்தில் மூழ்கின. சில இடங்களில் நீர்மட்டம் ஒரு மீட்டர் வரை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு நீர் புகுந்ததால் மக்கள் தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்களும் வாகனங்களும் சேதமடைந்தன.
கனமழையும் பலத்த காற்றும் மீட்பு நடவடிக்கைகளை சிரமப்படுத்தினாலும், செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் நீர்மட்டம் மெதுவாக குறையத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெள்ளத்தினால் இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 25, 2026, 5:35 pm
ரகசிய ஆயுத ஏற்றுமதியா? காசா போர் காலத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கியதாக இந்தியா மீது குற்றச்சாட்டு
February 25, 2026, 5:33 pm
ஈரானின் நீண்ட தூர ஏவுகணை திட்டம்: டிரம்ப் கடும் குற்றச்சாட்டு
February 25, 2026, 5:14 pm
பாலஸ்தீன பள்ளிவாசல் மீது யூதர்களின் தாக்குதல்
February 25, 2026, 11:29 am
தடுப்பூசி பரிந்துரைகளை குறைத்ததற்காக, டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 15 மாநிலங்கள் வழக்கு தொடுத்துள்ளன
February 25, 2026, 10:31 am
வாஷிங்டனில் நான்கு பேரை குத்திக் கொன்ற ஆடவர் போலீஸாரல் சுட்டுக் கொல்லப்பட்டார்
February 25, 2026, 10:30 am
வெந்நீர் ஊற்றி கொடூர சித்திரவதை: 21 வயது இளம்பெண் தப்பியோட்டம்
February 24, 2026, 5:31 pm
எல்லைச் சுவருக்காக மக்களின் வீடுகள் பறிப்பு: ட்ரம்ப் அரசின் அதிரடி முடிவு
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
