நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரமலான் முதல் நாளில் ஏற்பட்ட துயரம்: பாகிஸ்தானில் எரிவாயு வெடிப்பில் 16 பேர் பலி

இஸ்லாமாபாத்: 

தெற்கு பாகிஸ்தானில் எரிவாயு வெடிப்பால் ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நடந்ததாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) தெரிவித்துள்ளது.

வெடிப்பு ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, கராச்சி நகரில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கும் உயிருடன் உள்ள மக்களை மீட்க, கனரக இயந்திரங்கள், வெட்டும் கருவிகளின் உதவியுடன் மீட்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மீட்புப் பணியாளர் ஒமைர் கான் தெரிவித்தார்.

ரமலான் முதல் நாளில் அதிகாலை சஹரி (Sehri) உணவுக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகவும், இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த விபத்தில் காயமடைந்த குறைந்தது 14 பேர் நகரின் முக்கிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஜப்பார் கன்வார் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset