நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மார்கோஸ்யின் ஹாட் கோல்: ஜேடிடி 16-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

கோலாலம்பூர்: 

மார்கோஸ் கில்ஹெர்ம், விஸல் கோபெ அணியை 1–0 என்ற நிலையில் வீழ்த்தி, ஆசியா சாம்பியன்ஸ் லீக் (ACLE) 16-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்ததில் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இந்த வெற்றி 90 நிமிட போராட்டத்தின் போது அனைத்து வீரர்களும் குழுவாக இணைந்து செயல்பட்டதனால் கிடைத்தது என்பதை அவர் பெருமையாக தெரிவித்தார்.

முக்கியமாக மார்கோஸ், ரசிகர்களின் ஆதரவே வெற்றியின் முக்கிய காரணமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஜொகூர் தாருல் தா'சிமில் (JDT) சேர்ந்த மார்கோஸ், தனது செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். 

ஒவ்வொரு பயிற்சி அமர்வும் தனது விளையாட்டின் தரத்தை மேம்படுத்தவும், பயிற்சியாளர், அணியினரின் நம்பிக்கையை ஈடுசெய்யவும் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset