செய்திகள் உலகம்
இந்தோனேசியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 19% ஆக குறைப்பு
நியூயார்க்:
அமெரிக்கா (AS), இந்தோனேசியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகை அறிவித்தது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், வர்த்தகத்திற்கு விதிக்கப்படும் சுங்கவரி, சுங்கமற்ற தடைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதலில் அறிவிக்கப்பட்ட இந்த பரஸ்பர ஒப்பந்தத்தின் கையெழுத்தை நினைவுகூரும் வகையில், இந்தோனேசிய அரச அதிகாரிகள் வாஷிங்டன் நகர மையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் இந்தோனேசிய பொருட்களுக்கு 19 சதவீத சுங்கவரி விதிக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்திற்கு முன்பு, 280 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, 32 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், உள்ளூர் உற்பத்தி கட்டாய விதிகளிலிருந்து அமெரிக்க நிறுவனங்களுக்கு விலக்கு வழங்க ஜகார்த்தா ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும், இந்தோனேசியாவில் விற்கப்படும் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்கவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனோடு, அமெரிக்க எரிசக்தி பொருட்கள், வேளாண் உற்பத்திகள், விமானப் போக்குவரத்து தொடர்பான பொருட்கள், போயிங் விமானங்கள் உட்பட அனைத்தையும் மொத்தம் 33 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் RM129.0 பில்லியன்) மதிப்பில் வாங்க இந்தோனேசியா ஒப்புக்கொண்டுள்ளது.
முன்னதாக அதிக சுங்கவரி விதிக்கும் திட்டத்தால் நிதி சந்தைகளை அதிர்ச்சியடையச் செய்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பின்னர் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களை அறிவித்திருந்தார்.
கடந்த பிப்ரவரி 2 அன்று, இந்தியாவுக்கான சுங்கவரியைக் குறைக்கும் வர்த்தக ஒப்பந்தத்தையும் அவர் அறிவித்தார்.
இந்த வார தொடக்கத்தில், ஜப்பானிலிருந்து சுமார் 36 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் RM140.8 பில்லியன்) முதலீட்டு உறுதிமொழியை அவர் வெளிப்படுத்தினார். இது 2025 ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்ட வாஷிங்டன்–தோக்யோ வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
டிரம்பின் ஆக்கிரமிப்பான வர்த்தகக் கொள்கைகளின்போதும், 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருட்கள் வர்த்தகக் குறைபாடு சாதனை அளவில் உயர்ந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 20, 2026, 5:35 pm
ரமலான் முதல் நாளில் ஏற்பட்ட துயரம்: பாகிஸ்தானில் எரிவாயு வெடிப்பில் 16 பேர் பலி
February 20, 2026, 5:08 pm
ரஷ்யாவில் ஹெலிகாப்டர் மர்மமாக காணாமல் போன சம்பவம்: மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
February 20, 2026, 4:39 pm
அர்ஜென்டினாவில் 90% துறைகளில் வேலைநிறுத்தம்: தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்
February 20, 2026, 12:12 pm
மலைக் குளிரில் காதலியை தனியாக விட்டுச் சென்ற ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
February 20, 2026, 12:07 pm
ரமலானை முன்னிட்டு காசாவுக்குக் கூடுதல் உதவிகளை அனுப்பிய எகிப்து
February 20, 2026, 11:20 am
“15 நாளில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அமெரிக்கா ஈரானை தாக்கும்”: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
February 19, 2026, 5:24 pm
தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
February 19, 2026, 5:19 pm
போரின் நிழலில் புதைந்த கனவுகள்: காசா விளையாட்டு உலகம் சிதைவு
February 19, 2026, 4:09 pm
