நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆற்றங்கரையில் விளையாடிய போது தவறி விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு

கூச்சிங்:

கம்போங் கோலோங் சுங்கை தெங்கா பகுதியில், நண்பர்களுடன் ஆற்றங்கரையில் விளையாடியபோது ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞர், மூன்றாவது நாளான இன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

உயிரிழந்தவர் பதினாறு வயதான ஃபஹ்ரெல் ஜகுவான் ஹஸ்புல்லா ஆவார். இன்று காலை பதினொன்று இருபது மணியளவில், பொதுமக்கள் அவரது உடலை கண்டுபிடித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணியளவில், பள்ளி அருகே உள்ள ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால்சறுக்கி, வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராவாக் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்ததின்படி, அவசர அழைப்பு கிடைத்த உடன் பெட்ரா ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது. மூன்றாவது நாள் தேடுதல் பணியில் எட்டு தீயணைப்பாளர்கள் பங்கேற்று, ஆற்றின் கீழ்திசை நோக்கி இரண்டு கிலோமீட்டர் வரை தேடல் நடத்தப்பட்டது.

இறுதியில், சம்பவ இடத்திலிருந்து சுமார் இரண்டு புள்ளி ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உடல் கண்டெடுக்கப்பட்டு, படகில் கொண்டு வரப்பட்டது.

உறவினர்கள் அடையாளம் உறுதிப்படுத்திய பின்னர், உடல் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, பிற்பகல் இரண்டு மணியளவில் தேடுதல், மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset