செய்திகள் மலேசியா
மின்கம்பி திருட்டில் ஈடுப்பட்ட நால்வரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது
காஜாங்:
செமன்னி பகுதியில் உள்ள டி’கயாங்கான் செத்தியா எக்கோஹில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்திற்குச் சொந்தமான மின்கம்பிகளை திருட முயன்றதாக நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.
காலை 6.54 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், சந்தேகநபர்கள் மின்கம்பிகளை வெட்டிக் கொண்டிருந்ததை அப் பகுதி மக்கள் கவனித்து எச்சரித்ததையடுத்து, அவர்கள் சாம்பல் நிற வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்ததாவது, சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மின்கம்பிகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக விசாரணை நடைபெறுகிறது.
சம்பவம் குறித்து தகவல் உள்ளவர்கள் விசாரணை அதிகாரி நட்சுல் மஜ்தி அபு செமான் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 18, 2026, 12:40 pm
இந்தோனேசியாவின் நிலஅதிர்வினால் மலேசியாவிற்கு எந்த அபாயமும் இல்லை: மலேசிய வானிலை ஆய்வுத் துறை
February 18, 2026, 12:33 pm
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து: ஏழு வீடுகள் சாம்பல்
February 18, 2026, 11:57 am
விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காகத் தனித்து வாழும் தாய்க்கு RM 2500 அபராதம்
February 18, 2026, 11:55 am
போதைப்பொருள் சோதனையில் சிக்கிய 3 எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநர்கள்
February 18, 2026, 11:53 am
சபாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
February 18, 2026, 11:51 am
போலி டெண்டர் மோசடி: ஒப்பந்ததாரருக்கு RM1.08 லட்சம் இழப்பு
February 18, 2026, 11:46 am
சீன புத்தாண்டை சோகத்தில் வரவேற்ற தாய்–மகள்: தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்
February 18, 2026, 11:44 am
முதியவர் வீட்டில் பட்டாசு வீசிய மூன்று இளைஞர்கள் கைது
February 18, 2026, 11:41 am
