செய்திகள் மலேசியா
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து: ஏழு வீடுகள் சாம்பல்
கினபாதாங்கான்:
நேற்று இரவு கம்போங் பங்காலான் புக்கிட் காராம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வீடுகள் முழுமையாக எரிந்து அழிந்தன. இதனால் 16 பேர் அனைத்தையும் இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.
தீ விபத்து தகவல் கிடைத்ததும், தீ அணைப்பு நிலையத்திலிருந்து 17 வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
ஆற்றிலிருந்து நீர் எடுத்து தீ அணைக்கப்பட்டதுடன், அருகிலிருந்த பத்து வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 24 வயதுடைய தீ அணைப்பு வீரர் ஒருவரின் காலில் ஆணி குத்தி காயமடைந்து, கினபாதாங்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் ஒரு நான்கு சக்கர வாகனமும் தீயில் அழிந்தது.
இரவு 11.20 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அதிகாலை 1.40 மணிக்கு மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்தன.
காவல் துறை, பொதுமக்கள் பாதுகாப்பு படை, மின்சார துறை, சமூக நலத்துறை ஆகியவை இதில் ஒன்றாக இணைந்து செயல்பட்டன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 18, 2026, 12:40 pm
இந்தோனேசியாவின் நிலஅதிர்வினால் மலேசியாவிற்கு எந்த அபாயமும் இல்லை: மலேசிய வானிலை ஆய்வுத் துறை
February 18, 2026, 12:35 pm
மின்கம்பி திருட்டில் ஈடுப்பட்ட நால்வரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது
February 18, 2026, 11:57 am
விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காகத் தனித்து வாழும் தாய்க்கு RM 2500 அபராதம்
February 18, 2026, 11:55 am
போதைப்பொருள் சோதனையில் சிக்கிய 3 எக்ஸ்பிரஸ் பேருந்து ஓட்டுநர்கள்
February 18, 2026, 11:53 am
சபாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
February 18, 2026, 11:51 am
போலி டெண்டர் மோசடி: ஒப்பந்ததாரருக்கு RM1.08 லட்சம் இழப்பு
February 18, 2026, 11:46 am
சீன புத்தாண்டை சோகத்தில் வரவேற்ற தாய்–மகள்: தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்
February 18, 2026, 11:44 am
முதியவர் வீட்டில் பட்டாசு வீசிய மூன்று இளைஞர்கள் கைது
February 18, 2026, 11:41 am
