செய்திகள் உலகம்
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
பாரிஸ்:
பிரான்சில் 50 வயது பெண், தனது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு குழந்தைகளின் சடலங்களை மறைத்து வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பிரான்சில் கடந்த சில ஆண்டுகளிலிருந்து நடைபெறும் குழந்தை கொலை சம்பவங்களில் புதிதாகும்.
அந்த பெண் பவுலோன்-பில்லன்கோர்ட்டில் கைது செய்யப்பட்டு, தனது பிறந்த குழந்தைகளை குளிர்சாதனத்தில் வைத்ததாகவும் ஒப்புக்கொண்டார். அவருக்கு மூன்று வேறு உறவுகளில் பிறந்த ஒன்பது குழந்தைகள் உள்ளனர்.
போலீஸ் விசாரணை நடத்தும்போது, அவர் கர்ப்பத்தை தனக்குத் தெரிந்தவர்களுக்கு மறைத்து வந்ததாக கூறினார். சந்தேக நபரால் தனது குழந்தைகள் எப்போது பிறந்தது என்பதை சரியாகச் சொல்ல முடியவில்லை.
இதனிடையே சோதனையின் போது, அந்த பெண் பலமுறை அழுந்துக் கொண்டு, குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 3:48 pm
தப்பிக்க வழியின்றித் தவிக்கும் மக்கள்: போரினால் சிதைந்த சிரியாவிற்குத் திரும்பும் அகதிகள்
April 16, 2026, 10:21 am
துருக்கியில் 14 வயது பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனா்
April 16, 2026, 10:08 am
அமெரிக்காவின் பிடிவாதத்தால் தோல்வியுற்ற பேச்சுவார்த்தை: உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டும் ஈரான்
April 16, 2026, 10:04 am
ஹோர்முஸ் ஜலசந்தியில் 20,000 மாலுமிகள், 2,000 கப்பல்கள் சிக்கியுள்ளன
April 15, 2026, 10:53 am
லெபனான் எல்லையில் மீண்டும் அமைதி திரும்புமா?: அதிபர் ஜோசப் அவ்ன் முன்வைக்கும் தீர்வு
April 15, 2026, 10:20 am
32 வயது வாலிபருக்கு நேர்ந்த வினோதச் சம்பவம்: 20 வருடங்களாக வயிற்றுக்குள் இருந்த வெப்பமானி
April 15, 2026, 9:51 am
ஈரானுடனான போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு
April 14, 2026, 5:06 pm
