நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹோர்முஸ் ஜலசந்தியில் 20,000 மாலுமிகள், 2,000 கப்பல்கள் சிக்கியுள்ளன

டெஹ்ரான்:

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏறத்தாழ 20,000 மாலுமிகளும், சுமார் 2,000 கப்பல்களும் சிக்கியுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு அறிவித்துள்ளதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள ஏறத்தாழ 20,000 மாலுமிகளையும், சுமார் 2,000 கப்பல்களையும் வெளியேற்றுவதற்கான அவசரகாலத் திட்டத்தை சர்வதேச கடல்சார் அமைப்பு  தயாரித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸ் ஜலசந்தி சுமார் 30 கிலோமீட்டர் அகலம் மட்டுமே கொண்டிருப்பதாலும், பாதுகாப்பு அபாயம் இன்னும் அதிகமாக இருக்கிறது.

இதனால் நாடுகளுக்கிடையே நெருங்கிய ஒருங்கிணைப்பு தேவைப்படும் என்பதால், வெளியேற்றும் செயல்முறையை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாது என்று சர்வதேச கடல்சார் அமைப்பு பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset