செய்திகள் உலகம்
ஹோர்முஸ் ஜலசந்தியில் சீன, ஈரானியக் கப்பல்களின் மர்மப் பயணம்
இஸ்தான்புல்:
அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட சீன எண்ணெய் கப்பல் ஒன்று, நேற்று ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றது. 'ஷாங்காய் சுவான்ருன்' எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், அமெரிக்காவின் தேடப்படும் பட்டியலில் உள்ளது.
இக்கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சீனாவுக்குச் சென்று கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல ஈரானிலிருந்து புறப்பட்ட மற்றொரு கப்பலும் அதே பகுதியில் தென்பட்டது. அந்தக் கப்பல், சவூதி அரேபியாவிலிருந்து வருவதாகத் தவறான சிக்னல்களை (AIS) அனுப்பியது. தனது உண்மையான இருப்பிடத்தை மறைக்க அந்தக் கப்பல் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்குகளுக்கு மத்தியில், பல கப்பல்கள் தங்களின் உண்மையான இருப்பிடத்தையும் பயணப் பாதையையும் மறைக்கத் தவறான தகவல்களை ஒளிபரப்புவது அல்லது சிக்னல்களை முழுமையாக முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஹோர்முஸ் ஜலசந்தி போன்ற முக்கியமான, போர் மேகங்கள் சூழ்ந்த பகுதிகளில் இத்தகைய மர்மப் பயணங்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 3:04 pm
வங்காளதேசத்தில் பரபரப்பு: மத விவகாரத்தில் ஆன்மிகத் தலைவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம்
April 13, 2026, 10:40 am
உலகின் மிக உயரமான 'பாழ்' கட்டிடத்திற்கு விடிவுகாலம்
April 12, 2026, 6:08 pm
