நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லெபனான் எல்லையில் மீண்டும் அமைதி திரும்புமா?: அதிபர் ஜோசப் அவ்ன் முன்வைக்கும் தீர்வு

பெய்ரூட்: 

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே மீண்டும் போர் மூண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்தப் பேச்சுவார்த்தையானது, லெபனான் மக்கள் அனுபவித்து வரும் நீண்டகாலப் பேரிடர்களுக்கும் துயரங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலியப் படைகளின் ஆக்கிரமிப்பு தொடரும் வரை அங்கு நிரந்தர அமைதி திரும்பாது என்று அதிபர் அவ்ன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைப் பகுதி வரை லெபனான் இராணுவத்தை மீண்டும் நிலைநிறுத்துவதே இந்தப் பிரச்சினைக்குச் சரியான தீர்வாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை லெபனான் தேசியப் பாதுகாப்புப் படைகளே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதில் வேறு எந்தப் தரப்பினரின் தலையீடும் இருக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதன் மூலமே லெபனானின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட முடியும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset