செய்திகள் உலகம்
32 வயது வாலிபருக்கு நேர்ந்த வினோதச் சம்பவம்: 20 வருடங்களாக வயிற்றுக்குள் இருந்த வெப்பமானி
பெய்ஜிங்:
சீனாவின் ஜெஜியாங் நகரைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க வாங் என்ற நபர், கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சிறுகுடலின் தொடக்கப் பகுதியில் ஒரு அந்நியப் பொருள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அது ஒரு பாதரச வெப்பமானி (Thermometer) என்பதை உறுதி செய்த மருத்துவர்கள், இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, தான் 12 வயதாக இருந்தபோது தற்செயலாக அந்த வெப்பமானியை விழுங்கிவிட்டதாகவும், பயம் காரணமாக அதனைத் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்றும் வாங் ஒப்புக்கொண்டார்.
அன்று முதல் இன்று வரை எந்த அறிகுறியும் இல்லாததால் அவர் அதனை மறந்துவிட்ட நிலையில், தற்போது ஏற்பட்ட வயிற்று வலியே உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.
அந்த வெப்பமானி குடலை நேரடியாகத் தாக்கிக் கொண்டிருந்ததால், இரத்தப்போக்கு அல்லது குடல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததை மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த நுணுக்கமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த வெப்பமானி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. நீண்ட காலம் உடலுக்குள் இருந்தபோதிலும் அது உடையாமல் அப்படியே இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிப்பொருள் எதனையும் தவறுதலாக விழுங்கிவிட்டால், உடனடியாக உணவு உண்பதைத் தவிர்த்துவிட்டு மருத்துவ உதவியை நாட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சீனாவில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளாவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 10:53 am
லெபனான் எல்லையில் மீண்டும் அமைதி திரும்புமா?: அதிபர் ஜோசப் அவ்ன் முன்வைக்கும் தீர்வு
April 15, 2026, 9:51 am
ஈரானுடனான போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு
April 14, 2026, 5:06 pm
ஹோர்முஸ் ஜலசந்தியில் சீன, ஈரானியக் கப்பல்களின் மர்மப் பயணம்
April 13, 2026, 3:04 pm
