செய்திகள் மலேசியா
திறந்த வெளி எரிப்பை தவிர்க்க வேண்டும்: தீயணைப்பு துறை எச்சரிக்கை
கோலாலம்பூர்:
மலேசியா தீயணைப்பு, மீட்புத் துறை 2026-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை நாடு முழுவதும் ஏறத்தாழ 7,000 திறந்த வெளித் தீப்பற்றல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இத்தகைய சம்பவங்கள் பெரும்பாலும் காலியான நிலங்களில் ஏற்பட்டுள்ளதாகவும், அவை பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தீயணைப்பு, மீட்புத் துறையின் தலைமை இயக்குநர், ஹிஷாம் முஹம்மது கூறுகையில், நீண்ட காலமாக நிலவும் வறண்ட காலநிலையும், மனித அலட்சியமும் தீப்பற்றல் அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளன என தெரிவித்தார்.
தீ வேகமாக பரவும் சூழல் உருவாகுவதால், தீயணைப்பு பணியாளர்கள் கடும் சவால்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் திறந்த வெளிகளில் குப்பைகளையோ அல்லது செடிகளை எரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், தீப்பற்றல் ஏற்பட்டதை கண்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய ஒத்துழைப்பின் மூலமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என தீயணைப்பு துறை வலியுறுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
