நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹம்ஸா எதைத் தேர்ந்தெடுத்தாலும், அது தனிநபரின் உரிமை: மொஹைதின்

கோலத் திரெங்கானு:

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின், தனது அரசியல் திசையைத் தீர்மானிப்பது அவரது கையில்தான் உள்ளது.

பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை வலியுறுத்தினார்.

ஹம்ஸா மற்றொரு கட்சியில் சேரக்கூடும் அல்லது ஒரு புதிய கட்சியை உருவாக்கக்கூடும் என்பது உள்ளிட்ட பல்வேறு யூகங்களை ஏற்றுக்கொண்ட  அவர்,

அவரால்  என்ன முடிவு செய்யப்பட்டாலும் அது தனிநபரின் உரிமை என்று கூறினார்.

கட்சி என்ன முடிவு செய்ய விரும்புகிறதோ, அதை நான் சொல்லத் தேவையில்லை. அது அவர்களுடைய உரிமை.

ஒரு புதிய கட்சியை உருவாக்க விரும்புவது, மற்றொரு கட்சியில் சேர விரும்புவது, அந்தக் கட்சியையோ இந்தக் கட்சியையோ விலைக்கு வாங்க விரும்புவது எல்லாம் அது என் உரிமை அல்ல என்று திரெங்கானு பெர்சத்து கட்சியின் திறந்த இல்ல நிகழ்வில் சந்தித்தபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset