நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிவரவுத் துறையின் அதிரடி சோதனையில் சிக்கிய 119 வெளிநாட்டவர்கள் கைது

கூலிம்: 

கெடா மாநிலத்தின் கூலிம், பாடாங் மெஹா பகுதியில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் நேற்றைய தினம் குடிவரவுத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, அதிகாரி ஒருவர் காயமடைந்தார். 

'ஓப் சாப்பூ' (Op Sapu) என்று பெயரிடப்பட்ட இந்தச் சோதனையானது காலை 10 மணியளவில் நடைபெற்றது. கட்டிடக் கூரைப்பகுதியில் மறைந்திருந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த அதிகாரி கீழே விழுந்ததில் அவரது கையில் இரும்பு கம்பி குத்தி காயம் ஏற்பட்டது.

சோதனையின் போது குடிவரவுத் துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற தொழிலாளர்கள், கட்டிடத்தின் கூரைகள், இயந்திரங்களுக்குப் பின்னால் ஆபத்தான முறையில் ஒளிந்து கொண்டதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

காயமடைந்த அதிகாரிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது மொத்தம் 155 நபர்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த சீனா, இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 119 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் அனைவரும் குடிவரவுச் சட்டம், குடிவரவு விதிமுறைகளின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குடிவரவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset