செய்திகள் மலேசியா
தெமர்லோ தொகுதி யாருக்கு? அமானா - பிகேஆர் இடையே வெடிக்கும் மோதல்
பெட்டாலிங் ஜெயா:
அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான், ஒற்றுமைக் கூட்டணிக்காக, தெமர்லோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் என்று அமானா தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
பஹாங் அமானா தலைவர் ஃபாட்ஸ்லி ரம்லி, 2018 பொதுத் தேர்தலில் அந்தக் கூட்டாட்சித் தொகுதியை வென்றதும், 2022 ஆம் ஆண்டில் பெரிகாத்தான் நேஷ்னலிடம் அதை இழந்ததும், தெமர்லோ எப்போதும் தங்கள் கட்சிக்கான ஒரு பாரம்பரிய தொகுதியாக இருந்து வருவதாகத் தெரிவித்தார்.
"அமானா தெமர்லோவில் போட்டியிட விரும்புகிறது, ஏனெனில் அது பாரம்பரியமாக எங்கள் தொகுதியாக இருந்து வருகிறது" என்று பஹாங் நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
பிகேஆர்-இன் தெமர்லோ பிரிவு முன்னர் அந்தத் தொகுதிக்கு உரிமை கோரியிருந்தது. 16-ஆவது பொது தேர்தலில் அங்கு போட்டியிடுவதற்காக, அதன் பிரிவுக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
பிகேஆர், அமானா ஆகியவை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் நட்புக் கட்சிகளாகும்.
16-ஆவது பொது தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் குறித்து பஹாங் பக்காத்தான் ஹராப்பான் இதுவரை விவாதிக்கவில்லை என்றும், தெமர்லோ தொகுதியைப் பிகேஆர்-க்கு அமானா ஒப்படைப்பது என்பது இன்னும் அதிகம் என்றும் ஃபாட்ஸ்லி கூறினார்.
அத்தகைய ஒரு தீர்மானத்திற்கு பிகேஆர் பிரிவின் உரிமையை அமானா மதிப்பதாகவும், இருப்பினும், பக்காத்தான் ஹரப்பான், பாரிசான் நேசனல் ஆகியவற்றின் ஒற்றுமைக் கூட்டணியின் ஒருமித்த கருத்தின் மூலம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிகேஆர்-இன் தேர்தல் தோல்விகள் இருந்தபோதிலும், பிகேஆர்-இன் தொகுதிகளை அமானா கோரவில்லை என்றும் அவர் கூறினார்.
"இந்திரா மகோதா போன்ற பல நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாங்கள் வலுவாக இருக்கிறோம். இருப்பினும், பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் 2022 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், (அந்தத் தொகுதியைக் கோரி) நாங்கள் சத்தம் போடவில்லை.
"இந்திரா மகோதாவில் தொடர்ந்து போட்டியிட பிகேஆர்-க்கு அனுமதிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.
தெமர்லோவில் பாரிசான் நேசனலுடன் அமானா ஒரு நல்ல பணி கூட்டாண்மையைக் கொண்டுள்ளதாகவும், மற்றொரு பக்காத்தான் ஹரப்பான் கூட்டாளியான டி.ஏ.பி., தொகுதிக்காக தொடர்ந்து போட்டியிடும் அமானாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஃபாட்ஸ்லி தெரிவித்தார்.
2022 பொதுத் தேர்தலில், பாஸ்-இன் சலாமியா நோர், தனது நெருங்கிய போட்டியாளரான அமானா இளைஞர் தலைவர் ஹஸ்பீ முடாவை 5,520 வாக்குகள் பெரும்பான்மையில் வீழ்த்தி, தெமர்லோ தொகுதியை வென்றார்.
அனுவார் தாஹிர் மூலம், 2018 பொதுத் தேர்தலில் அமானா அந்தத் தொகுதியை வென்றது. அவர் 1,904 வாக்குகள் பெரும்பான்மையைப் பெற்றார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 3:53 pm
மைத்துனரைக் கழுத்தறுத்துக் கொன்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
April 15, 2026, 3:28 pm
குடிவரவுத் துறையின் அதிரடி சோதனையில் சிக்கிய 119 வெளிநாட்டவர்கள் கைது
April 15, 2026, 3:21 pm
கண்டெடுத்த கைத்துப்பாக்கியை ஒப்படைக்காமல் வீட்டில் பதுக்கி வைத்த நபருக்குச் சிறை தண்டனை
April 15, 2026, 3:21 pm
ஹம்ஸா எதைத் தேர்ந்தெடுத்தாலும், அது தனிநபரின் உரிமை: மொஹைதின்
April 15, 2026, 1:11 pm
ஆஸ்திரேலிய பிரதமர் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மலேசியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்
April 15, 2026, 12:53 pm
எரிசக்தி நெருக்கடியை வெல்லும் பெட்ரோனாஸ்: மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் நிலையான விநியோகம்
April 15, 2026, 12:48 pm
மலேசியாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
April 15, 2026, 12:38 pm
