செய்திகள் மலேசியா
கண்டெடுத்த கைத்துப்பாக்கியை ஒப்படைக்காமல் வீட்டில் பதுக்கி வைத்த நபருக்குச் சிறை தண்டனை
பத்து பஹாட்:
பெட்ரோல் நிலைய கழிவறையில் கண்டெடுத்த கைத்துப்பாக்கி, தோட்டாக்களைத் திருடி, சட்டவிரோதமாகத் தனது வீட்டில் ஒளித்து வைத்திருந்த தொழிலாளி ஒருவருக்குப் பத்து பஹாட் நீதிமன்றம் RM4,500 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மத் ஹஸ்னி முஹம்மத் (36) என்ற அந்த நபர், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் இந்தத் தண்டனையை வழங்கினார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறியதால், அவருக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு குளுவாங் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி, ஜாலான் குளுவாங்கிலுள்ள பெட்ரோல் நிலைய கழிவறைக்குச் சென்ற அந்த நபர், அங்குப் பாதுகாவலர் ஒருவரால் தவறுதலாக விட்டுச் செல்லப்பட்ட கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்களைக் கண்டெடுத்துள்ளார்.
அதனைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்ற அவரிடம், அந்தத் துப்பாக்கியை மீண்டும் ஒப்படைக்குமாறு அவரது மனைவி அறிவுறுத்தியும் அவர் அதனை ஏற்கவில்லை.
இறுதியில், பெட்ரோல் நிலையத்திலிருந்த கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகளின் உதவியுடன் போலிசார் அந்த நபரை அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் வழிகாட்டுதலின்படி, அவரது வீட்டின் பின்புறம் ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்களைப் போலிசார் மீட்டனர்.
1960-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம், குற்றவியல் சட்டத் தொகுப்பின் 379-வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 3:55 pm
தெமர்லோ தொகுதி யாருக்கு? அமானா - பிகேஆர் இடையே வெடிக்கும் மோதல்
April 15, 2026, 3:53 pm
மைத்துனரைக் கழுத்தறுத்துக் கொன்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
April 15, 2026, 3:28 pm
குடிவரவுத் துறையின் அதிரடி சோதனையில் சிக்கிய 119 வெளிநாட்டவர்கள் கைது
April 15, 2026, 3:21 pm
ஹம்ஸா எதைத் தேர்ந்தெடுத்தாலும், அது தனிநபரின் உரிமை: மொஹைதின்
April 15, 2026, 1:11 pm
ஆஸ்திரேலிய பிரதமர் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மலேசியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்
April 15, 2026, 12:53 pm
எரிசக்தி நெருக்கடியை வெல்லும் பெட்ரோனாஸ்: மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் நிலையான விநியோகம்
April 15, 2026, 12:48 pm
மலேசியாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
April 15, 2026, 12:38 pm
