செய்திகள் மலேசியா
மலேசிய திராவிட கழகத்தின் பொங்கல் விழா
கோலாலம்பூர்:
தை பிறக்கும் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என மலேசிய திராவிட கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் கூறினார்.
இந்த நாளை தமிழர்கள் அனைவரும் குடும்பத்தாருடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
தமிழ் புத்தாண்டு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தாலும் தமிழர்களாகிய நாம் தை முதல் நாளேயே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி அதனை அடுத்த தலைமுறையினர் வரையில் கொண்டுச் சேர்க்க வேண்டும். எதற்காகவும் யாருக்காகவும் இதனை நாம் விட்டு கொடுக்க கூடாது.
குறிப்பாக, தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த மலேசியர்களின் விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.
மூவினத்தவர்களும் பொங்கல் வைத்து மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்க வேண்டும் என மலேசிய திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவில் பேசிய பொன்வாசகம் வலியுறுத்தினார்.
ஷாஆலம் டாலியா மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஜி அஸ்லி பின் யூசோப் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் சிறுவர்களுக்கென சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், பொங்கல் திருநாளன்று பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக கழகம் முன்னெடுத்து வந்த தீர்மானம் மீண்டும் இவ்விழா மூலம் கொண்டு வரப்பட்டது.
இவ்விழாவில் கோலாலம்பூர் உட்பட கெடா, பினாங்கு, பேரா, மலாக்கா ஆகிய மாநிலங்களில் இருந்து 250க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:21 am
கட்டுக்கோப்பான கடமை: அரசு ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முறையான திட்டமிடல்
April 16, 2026, 10:03 am
பகாங் பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நீக்கப்பட்டார்
April 16, 2026, 10:03 am
எரிசக்தி நெருக்கடி தொடர்பான போலிச் செய்தி வழக்கில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படும்: ஃபஹ்மி
April 16, 2026, 10:02 am
தண்ணீர் தொட்டியில் நாயை அமிழ்த்தி வைரலான ஆடவர் கைது
April 15, 2026, 10:20 pm
பூடி95 திட்டத்தைப் போன்ற டீசல் மானிய வழிமுறையை ஆய்வு செய்ய நிதியமைச்சுக்கு உத்தரவு: ஃபஹ்மி
April 15, 2026, 10:19 pm
ஏப்ரல் 25 அன்று உண்மையான ஆர்ப்பாட்டத்தை நடத்த ரபிசி ரம்லி விரும்பம்
April 15, 2026, 10:19 pm
டத்தோ ருஸ்லி ஜாபரை புதிய தலைவராக எச்ஆர்டி கோர்ப் நியமித்தது
April 15, 2026, 7:26 pm
டீசலின் விலை 75 சென் குறைந்தது: நாளை முதல் அமல்
April 15, 2026, 6:49 pm
