செய்திகள் உலகம்
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
ஸ்ட்ராஸ்பர்க்:
கிழக்கு பிரான்ஸில் குளிர் சாதனப் பெட்டி ஒன்றில் குளிரூட்டப்பட்ட நிலையில் இறந்த 2 குழந்தைகளின் தாய் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு, தற்போது முன் விசாரணைக்காக தற்காலிகமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், கடந்த சில ஆண்டுகளாகப் பிரான்ஸில் இடம்பெற்றுள்ள குழந்தை கொலை சம்பவங்களில் சமீபத்தியது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
50 வயதுடைய அந்தப் பெண்மணி, கடந்த வியாழக்கிழமை பாரிஸின் புறநகரமான பவுலோன்-பில்லன்கோர்ட் அருகே கைது செய்யப்பட்ட பின்னர் வழக்கறிஞர்களால் குற்றம்சாட்டப்பட்டார் என்று பிரான்ஸ் வழக்கறிஞர் செட்ரிக் லோகெலின் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமீபத்தில் பிறந்த குழந்தைகளைக் குளிரூட்டியதாக ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை வேறு யாரும் இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்படவில்லை.
ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண் ஏல்வில்லர்ஸ்-எட்-ல்யாமோன்டில் உள்ள தனது வீட்டை விட்டு கடந்த டிசம்பர் மாதம் வெளியேறிய பின்னர் இக்கொடூரச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 10ஆம் தேதி, குடும்ப உறுப்பினர் ஒருவர் ஒரு குழந்தையின் சடலத்தைக் குளிர் சாதனப் பெட்டியில் குளிரூட்டிய நிலையில் கண்டுபிடித்தார். பின்னர் போலீசார் பையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்னொரு குழந்தையின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
அந்தப் பெண் குழந்தைகளைக் பிறந்த உடனேயே குளிரூட்டியதாக ஒப்புக்கொண்டாதாக லோகெலின் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் தனது கர்ப்பத்தைக் குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து மறைத்து வைப்பதற்காக சுருண்ட உடைகள் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணையின் போது, அவர் அடிக்கடி அழுததோடு பிள்ளைகளுக்கும் குடும்பத்திற்கும் வருந்துவதாக கூறினாலும், குழந்தைகளின் பிறந்த தேதியை அவரால் சரியாகத் தெரிவிக்க முடியவில்லை.
முன்னதாக கைது செய்யப்பட்ட அவரது கணவன் தன் மனைவியின் கர்ப்பத்தை அறியவில்லை என்று கூறியதுடன் வீட்டில் குழந்தைகளின் சடலங்களைக் கண்டதில் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தற்போது 15 வயதுக்குக் குறைந்தவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. குற்றம் நிருபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 3:48 pm
தப்பிக்க வழியின்றித் தவிக்கும் மக்கள்: போரினால் சிதைந்த சிரியாவிற்குத் திரும்பும் அகதிகள்
April 16, 2026, 10:21 am
துருக்கியில் 14 வயது பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்தனா்
April 16, 2026, 10:08 am
அமெரிக்காவின் பிடிவாதத்தால் தோல்வியுற்ற பேச்சுவார்த்தை: உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டும் ஈரான்
April 16, 2026, 10:04 am
ஹோர்முஸ் ஜலசந்தியில் 20,000 மாலுமிகள், 2,000 கப்பல்கள் சிக்கியுள்ளன
April 15, 2026, 10:53 am
லெபனான் எல்லையில் மீண்டும் அமைதி திரும்புமா?: அதிபர் ஜோசப் அவ்ன் முன்வைக்கும் தீர்வு
April 15, 2026, 10:20 am
32 வயது வாலிபருக்கு நேர்ந்த வினோதச் சம்பவம்: 20 வருடங்களாக வயிற்றுக்குள் இருந்த வெப்பமானி
April 15, 2026, 9:51 am
ஈரானுடனான போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு
April 14, 2026, 5:06 pm
