நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தவறான புரிதலால் மோட்டார் சைக்கிளை மோதிய நான்கு சக்கர வாகனம்

கோலாலம்பூர்: 

இன்று நிகழ்ந்த ஒரு சம்பவத்தில், நான்கு சக்கர வாகனம் ஒன்று உள்ளூர் நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காஜாங் பகுதியிலுள்ள கம்போங் சுங்கை ஜெர்னெ பகுதியில் ஏற்பட்ட இரு தரப்பினருக்கிடையேயான தவறான புரிதலே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாகச் சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர், டத்தோ ஷசேலி கார் தெரிவித்துள்ளார்.

“ஆரம்பக்கட்ட விசாரணையில் நிலம்,  அந்தப் பகுதியில் லாரிகள் செல்லும் பாதை தொடர்பான தனிப்பட்ட தகராறுகளே இந்தச் சம்பவத்தின் முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது,”என அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் இரண்டு தனித்தனியான புகார்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், முதல் வழக்குத் தொடர்பான புகாரில், 30 முதல் 34 வயதுக்குட்பட்ட ஒரு உள்ளூர் நபரும், ஒரு வெளிநாட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாவது வழக்குத் தொடர்பான புகாரில், 24 முதல் 38 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் நபர்களும் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல் வழக்கில் சந்தேகநபராக உள்ளவர் இரண்டாவது வழக்கில் புகாரளித்தவராகவும், இரண்டாவது வழக்கில் புகாரளித்தவர் முதல் வழக்கில் சந்தேகநபராகவும் இருப்பதாக ஷசேலி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தனிப்பட்ட தவறான புரிதலால் ஏற்பட்டது மட்டுமே என்றும், இதில் கும்பல் வன்முறை அல்லது இனவெறி சார்ந்த எந்த அம்சமும் இல்லை என்றும் மேலும் பேசிய அவர் கூறினார்.

எனவே, பொதுமக்கள் சட்டத்திற்குப் புறம்பான எந்தச் செயலும் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும், பொது அமைதியைப் பாதிக்கும் வகையில் எந்தவிதமான ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307/279 மற்றும் 395/365 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset