செய்திகள் மலேசியா
அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மாணவர் கைது
பத்து பாஹாட்:
மூன்று பெண்களின் முன்னிலையில் அநாகரிகமான, ஒழுங்கற்றச் செயலில் ஈடுபட்டதாகப் பிடிபட்ட 24 வயது மாணவனை, விசாரணைக்கு உதவும் பொருட்டு நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்க இன்று மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்ரவிட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட அந்த மாணவனைக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377D-ன் கீழ் விசாரணையை நடத்துமாறு மஜிஸ்திரேட் நூராஷிடா அப்துர் ரஹ்மான், தடுப்பு காவல் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் ஜனவரி 26ஆம் தேதி காலை 8 மணியளவில் நடந்துள்ளதாகப் போலிஸ் புகாரில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 34 வயதுடைய இல்லத்தரசி தனது இரண்டு நண்பர்களுடன் பாரிட் ராஜா பகுதியில் மெதுவோட்டத்தில் ஈடுப்பட்டிருந்தபோது, அருகிலுள்ள புதர்களில் இருந்து சத்தம் கேட்டுள்ளது.
அப்போது, புதர்களுக்குள் ஆடைகளின்றி நிர்வாணமாக இருந்த அந்த மாணவனை அவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் அவன் அந்தப் பெண்களைப் பின்தொடர்ந்ததால், அவர்கள் பயத்தில் ஓடியுள்ளனர்.
அந்த இல்லத்தரசி உதவி கேட்டு கத்தியதுடன் அம்மாணவன் பின்னர் புதர்களுக்குள் சென்று உடை அணிந்துள்ளான்.
பின்னர் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி அங்கிருந்து சென்றான்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டப் பெண் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் அவனைக் கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது, அந்த இடத்திற்கு மீன் பிடிக்க வந்ததாக அந்த மாணவன் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பகுதி சதுப்பு நிலம் அல்ல, அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விசாரணையில், இதற்கு முன் மூன்று முறை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 11:02 pm
தவறான புரிதலால் மோட்டார் சைக்கிளை மோதிய நான்கு சக்கர வாகனம்
February 12, 2026, 10:19 pm
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் மலேசியக் கல்விச் சுற்றுலா 2026
February 12, 2026, 8:53 pm
மூவாரில் 26 வெளிநாட்டு பிரஜைகள் கைது
February 12, 2026, 8:52 pm
RM83 மில்லியன் மதிப்பிலான 1.6 டன் சியாபு போதைப்பொருள் பறிமுதல்
February 12, 2026, 7:37 pm
நிபோங் தெபாலில் கோர விபத்து: BMW மோதியதில் பெண் உயிரிழந்தார்
February 12, 2026, 5:49 pm
மனைவியை 13 முறை குத்தி கொன்ற கணவர்: குடும்ப வன்முறையில் உயிரிழந்த தம்பதி
February 12, 2026, 5:47 pm
காலநிலை மாற்றத்தினால் நாட்டின் அரிசி உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது: முஹம்மது சாபு
February 12, 2026, 4:34 pm
ஆபாச குறுஞ்செய்தி வழக்கு: முன்னாள் பாதுகாப்பு காவலருக்கு RM30,000 அபராதம்
February 12, 2026, 2:07 pm
