நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலநிலை மாற்றத்தினால் நாட்டின் அரிசி உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது: முஹம்மது சாபு

கோலாலம்பூர்: 

தற்போது சந்தையில் உள்ளூர் அரிசி குறைவாக கிடைப்பதற்கான காரணம், நாட்டின் அரிசியின் உற்பத்தி நிலை குறைந்ததனால் என்று விவசாய, உணவுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மது சாபு தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டு 2.06 மில்லியன் டன் பாசி உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 1.36 மில்லியன் டன் அரிசி கிடைத்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டை விட குறைவாகும். இதனால் நாட்டின் அரிசி தன்னிறைவு விகிதம் 52.9 சதவீதமாக குறைந்துள்ளது.

பயிரிடும் நிலப்பரப்பு குறைவு, உற்பத்தித் திறன் சரிவு, பாசன பிரச்சினைகள், வெள்ளம், வறட்சி, பூச்சி, நோய் தாக்கம், காலநிலை மாற்றம் ஆகியவை இதற்குக் காரணங்களாக கூறப்படுகின்றன.

இந்த நிலையை சமாளிக்க அரசு உற்பத்தி அதிகரிப்பு, நவீன தொழில்நுட்ப பயன்பாடு, விவேக (ஸ்மார்ட்) எஸ்.பி.பி திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

70 சதவீத உள்ளூர் அரிசி உற்பத்தி என்பது கட்டாய இலக்கு அல்ல; அது நீண்டகால உணவு பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு வழிகாட்டி இலக்காகும் என்றும் டத்தோ ஸ்ரீ முஹம்மது சாபு தெரிவித்தார். 

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset