செய்திகள் மலேசியா
நிபோங் தெபாலில் கோர விபத்து: BMW மோதியதில் பெண் உயிரிழந்தார்
நிபோங் தெபால்:
சிம்பாங் அம்பாட், ஜாவி பகுதியில் அமைந்துள்ள ஜிட் சின் 2 சீன இடைநிலைப் பள்ளி அருகே, காரும் லாரியும் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில், ஒரு BMW காரும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தீயணைப்பு துறைக்குப் பிற்பகல் 2.45 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததும், சுங்கை பாக்காப் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வண்டிகள் 2.54 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
காரின் ஓட்டுநர் இருக்கையிலும் பின்புற பயணி இருக்கையிலும் இரண்டு பெண்கள் சிக்கிக் கொண்டிருந்ததாகவும் லாரி ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“மீட்பு பணிக்கான சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.
“மாலை 3.05 மணிக்குள் அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் மீட்கப்பட்டனர்.
காரை ஓட்டிய பெண் சம்பவ இடத்திலேயே உயிரழந்ததாகச் சுகாதார அமைச்சக (KKM) பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 53 வயதுடைய லோ ஹூய் மெங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதால் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
“உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
" சுங்கை பாக்காப் தீயணைப்பு நிலைய அதிகாரிகள், காவல்துறை, சுகாதார அமைச்சகம், தாமன் சுகுன் தன்னார்வ தீயணைப்பு குழுவினர் இணைந்து ஈடுபட்ட இந்த நடவடிக்கை மாலை 4.11 மணிக்கு முழுமையாக முடிவடைந்தது,” என்று அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 11:02 pm
தவறான புரிதலால் மோட்டார் சைக்கிளை மோதிய நான்கு சக்கர வாகனம்
February 12, 2026, 10:19 pm
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் மலேசியக் கல்விச் சுற்றுலா 2026
February 12, 2026, 10:10 pm
அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மாணவர் கைது
February 12, 2026, 8:53 pm
மூவாரில் 26 வெளிநாட்டு பிரஜைகள் கைது
February 12, 2026, 8:52 pm
RM83 மில்லியன் மதிப்பிலான 1.6 டன் சியாபு போதைப்பொருள் பறிமுதல்
February 12, 2026, 5:49 pm
மனைவியை 13 முறை குத்தி கொன்ற கணவர்: குடும்ப வன்முறையில் உயிரிழந்த தம்பதி
February 12, 2026, 5:47 pm
காலநிலை மாற்றத்தினால் நாட்டின் அரிசி உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது: முஹம்மது சாபு
February 12, 2026, 4:34 pm
ஆபாச குறுஞ்செய்தி வழக்கு: முன்னாள் பாதுகாப்பு காவலருக்கு RM30,000 அபராதம்
February 12, 2026, 2:07 pm
