செய்திகள் மலேசியா
பியூஃபோர்டில் வெள்ளம் பாதிப்பு: 9 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன
பியூஃபோர்ட்:
சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இங்குள்ள ஒன்பது பள்ளிகள் இன்று மூடப்பட்டன.
மாநில கல்வித் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ரெய்சின் சைடின், தெரிவித்ததாவது, எட்டு பள்ளிகளின் வளாகத்தில் நீர் புகுந்ததாலும், பள்ளிகளுக்குச் செல்லும் பாதைகள் வெள்ளத்தால் மறிக்கப்பட்டதால் அவை மூடப்பட்டன என்று கூறினார்.
கிளியாஸ் பாரு தேசிய பள்ளி, சுவாசா தேசிய பள்ளி, லாகோ தேசிய பள்ளி, மெம்பகர் தேசிய பள்ளி, பத்து 60 தேசிய பள்ளி, கபாஜாங் தேசிய பள்ளி, ஜபாங் தேசிய பள்ளி, தேசிய இடைநிலைப் பள்ளியான செயின்ட் பால் ஆகிய எட்டு பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், மலேசிய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் (STPM) மறு தேர்வில் ஈடுபட்டுள்ள தேர்வு கண்காணிப்பாளர்களை அழைத்து வருவதற்கு கல்வித் துறை மலேசிய தீயணைப்பு மீட்புத் துறையின் உதவியை நாட வேண்டியிருந்தது என்று ரைசின் கூறினார். தேர்வு மையமாக இருந்த தேசிய இடைநிலைப்பள்ளியான காடோங்கிற்குச் செல்லும் பாதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் இது நிகழ்ந்தது என்று அவர் கூறினார்.
சுங்கை படாஸ் கரைபுரண்டு ஓடியதால் 18 கிராமங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு வெள்ளப் பேரிடரை அறிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பியூஃபோர்டும் சிபிடாங்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 1:52 pm
செக்கு சந்திரா கைது: போலிஸ்
February 12, 2026, 1:34 pm
மிசி திட்டம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் வெற்றி மடானி திட்டமாக தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
February 12, 2026, 12:46 pm
பள்ளிகளில் அதிகரிக்கும் பகடிவதை சம்பவங்கள்: 2,889 வழக்குகள் பதிவாகியுள்ளன
February 12, 2026, 12:22 pm
சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கிய இரு நிறுவன நிர்வாகிகளுக்கு தலா RM10,000 அபராதம்
February 12, 2026, 12:06 pm
ஃப்ரீமேசன் ஆதரவாளராக மூத்த பேராசிரியர் மீது குற்றச்சாட்டு:விசாரணையைத் தொடங்கியுள்ளது மலாயா பல்கலைக்கழகம்
February 12, 2026, 11:20 am
முன்னாள் மலாக்கா முதல்வரின் அரசியல் செயலாளர், அரசு துறை தலைவர்களைக் காவலில் வைக்க SPRM கோரியுள்ளது.
February 12, 2026, 10:40 am
கோத்தா கினபாலுவில் அதிர்ச்சி சம்பவம்: குப்பை கொட்டும் இடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
February 12, 2026, 10:32 am
