செய்திகள் மலேசியா
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் மலேசியக் கல்விச் சுற்றுலா 2026
கோலாலம்பூர்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் கீழும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் முன்னெடுப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைக்கு எல்லைகள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு உன்னதமான மலேசியப் பயணம் நிகழ்ந்துள்ளது.
அறிவியல், இலக்கியம், கலை, விளையாட்டு ஆகிய மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 40 சாதனையாளர்கள், 5 நாள் கல்விச் சுற்றுலாவாக பிப்ரவரி 9, 2026 அன்று மலேசியா வருகை தந்தனர்.
பயணத்தின் முக்கிய நிகழ்வுகள் என்று சிலவற்றை வகைப்படுத்தி உள்ளார்கள்
உயர் கல்விக்கான உத்வேகம்:
மாணவர்களின் சர்வதேச கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், புகழ்பெற்ற மாலாயா பல்கலைக்கழகத்திற்கு (University of Malaya) சிறப்புப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
உற்சாகமான வரவேற்பு:
மாலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன், மலேசிய வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA Malaysia) இந்த நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது.
இந்நிகழ்வில் முனைவர் அனுராதா ராஜசேகரம் (மாலாயா பல்கலைக்கழகம்), செங்குட்டுவன் (சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி இயக்குனர்), NRTIA Malaysia சங்கத்தின் சார்பாக:
ஃபிர்தௌஸ் கான் (தலைவர்), ஜான் ரீகன் (செயலாளர்), மணிகண்டன் (இணைச் செயலாளர்கள்), வசந்த் குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வரவேற்று சிறப்பித்தனர்.
மாணவர்களுக்குத் தேவையான பரிசுப் பைகளை (Goodie Bags) வழங்கி முஹம்மது காசிம் மாணவ மாணவிகளை மகிழ்வித்தார்.
இந்த இளம் சாதனையாளர்களின் பயணம் சிறக்கவும், அவர்களின் எதிர்காலம் ஒளிரவும் வாழ்த்துவோம் என்று வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 11:02 pm
தவறான புரிதலால் மோட்டார் சைக்கிளை மோதிய நான்கு சக்கர வாகனம்
February 12, 2026, 10:10 pm
அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மாணவர் கைது
February 12, 2026, 8:53 pm
மூவாரில் 26 வெளிநாட்டு பிரஜைகள் கைது
February 12, 2026, 8:52 pm
RM83 மில்லியன் மதிப்பிலான 1.6 டன் சியாபு போதைப்பொருள் பறிமுதல்
February 12, 2026, 7:37 pm
நிபோங் தெபாலில் கோர விபத்து: BMW மோதியதில் பெண் உயிரிழந்தார்
February 12, 2026, 5:49 pm
மனைவியை 13 முறை குத்தி கொன்ற கணவர்: குடும்ப வன்முறையில் உயிரிழந்த தம்பதி
February 12, 2026, 5:47 pm
காலநிலை மாற்றத்தினால் நாட்டின் அரிசி உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது: முஹம்மது சாபு
February 12, 2026, 4:34 pm
ஆபாச குறுஞ்செய்தி வழக்கு: முன்னாள் பாதுகாப்பு காவலருக்கு RM30,000 அபராதம்
February 12, 2026, 2:07 pm
