நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனைவியை 13 முறை குத்தி கொன்ற கணவர்: குடும்ப வன்முறையில் உயிரிழந்த தம்பதி

கோலாலம்பூர்: 

டாமன்சாரா கெப்போங் பகுதியில் உள்ள சன்வே எஸ்பிகே பகுதியில், ஆடவர் ஒருவர் தனது மனைவியை 13 முறை குத்தி கொலை செய்த பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

இத் தம்பதியின் உடல்கள் வீட்டின் ஓர் அறையில் ரத்தக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று காலை போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் 54 வயதுடைய ஆணும் 52 வயதுடைய பெண்ணும் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாகச் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் அஹமத் சுக்கார்னோ முஹம்மது சாஹாரி தெரிவித்தார். 

அப் பெண்ணின் கழுத்தில் 10 காயங்கள், இடது கையில் 1, உடம்பில் 2 உட்பட 13 காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 

கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்தச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இரு உடல்களும் உடற்கூறு பரிசோதனைக்காகக் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் பிரிவு 302 கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சட்டத்தை மதித்து, சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தகவல்கள் இருந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset