நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூவாரில் 26 வெளிநாட்டு பிரஜைகள் கைது

மூவார்: 

ஜொகூர் மாநில குடியுரிமைத் துறையும், மலேசிய காவல் துறையும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில், 26 வெளிநாட்டு குடியேறிகள் பல்வேறு குடியுரிமைச் சட்ட மீறல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 19 முதல் 48 வயதுக்குட்பட்ட 21 ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவர் என்று ஜொகூர் மாநில குடிவரவு இயக்குநர் டத்தோ முஹம்மத் ருஸ்டி முஹம்மத் தருஸ் தெரிவித்தார். 

அவர்கள் அனைவரும் 1959/63 குடியுரிமை சட்டத்தையும், 1963 குடியுரிமை விதிகளையும் மீறியதாக சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளிகள் தற்போது செத்தியா டிராபிகா குடியுரிமை தங்குமிடத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset