செய்திகள் மலேசியா
RM83 மில்லியன் மதிப்பிலான 1.6 டன் சியாபு போதைப்பொருள் பறிமுதல்
குவாந்தான்:
பகாங், திரெங்கானு கடற்பரப்பின் எல்லைக்கு அருகில் நேற்று இரண்டு கப்பல்கள் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1.572 டன் எடையுடைய சியாபு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது RM83 மில்லியனுக்கும் அதிக மதிப்புடையதாகும்.
பகாங் மாநில கடல்சார் அமலாக்க இயக்குநர் அட்மிரல் மஸ்லான் மாட் ரெஜாப் தெரிவித்ததாவது, காலை 10.47 மணி முதல் 10.50 மணி வரை, குவாந்தானின் வடகிழக்கே 107 கடலின் தொலைவில், தெற்குத் திசை நோக்கி பயணித்த இரண்டு கப்பல்கள் தடுக்கப்பட்டன.
சோதனையில், ஒரு கப்பலில் 76 மூட்டைகளில் சியாபு வகை போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதைப்பொருள் சர்வதேச சந்தைக்காக கடத்தப்பட்டதாகவும், டேங்கர் கப்பலிலிருந்து சரக்கு கப்பலுக்கு மாற்ற திட்டமிடப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் தாய்லாந்து நாட்டினரும், 8 பேர் இந்தோனேசிய நாட்டினரும் ஆவர்; அவர்களின் 33 வயது முதல் 71 வயது வரை ஆகும். இவர்கள் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது.
இரு கப்பல்களும் திரெங்கானுவில் உள்ள கெமாமன் கடல்சார் துறையிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த வழக்கு போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B கீழ் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறையும், பிரம்படி தண்டனையும் விதிக்கப்படலாம்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 12, 2026, 11:02 pm
தவறான புரிதலால் மோட்டார் சைக்கிளை மோதிய நான்கு சக்கர வாகனம்
February 12, 2026, 10:19 pm
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் மலேசியக் கல்விச் சுற்றுலா 2026
February 12, 2026, 10:10 pm
அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் மாணவர் கைது
February 12, 2026, 8:53 pm
மூவாரில் 26 வெளிநாட்டு பிரஜைகள் கைது
February 12, 2026, 7:37 pm
நிபோங் தெபாலில் கோர விபத்து: BMW மோதியதில் பெண் உயிரிழந்தார்
February 12, 2026, 5:49 pm
மனைவியை 13 முறை குத்தி கொன்ற கணவர்: குடும்ப வன்முறையில் உயிரிழந்த தம்பதி
February 12, 2026, 5:47 pm
காலநிலை மாற்றத்தினால் நாட்டின் அரிசி உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளது: முஹம்மது சாபு
February 12, 2026, 4:34 pm
ஆபாச குறுஞ்செய்தி வழக்கு: முன்னாள் பாதுகாப்பு காவலருக்கு RM30,000 அபராதம்
February 12, 2026, 2:07 pm
