செய்திகள் மலேசியா
சீனப் புத்தாண்டு பரிசாக சுங்கக் கட்டண தள்ளுபடி: மக்களுக்கு அரசு நற்செய்தி
புத்ராஜெயா:
சீனப் புத்தாண்டு பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, மக்களின் பயணச் செலவைக் குறைக்கும் நோக்கில் சுங்கக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் இதற்கான விரிவான விவரங்களை விரைவில் பொதுப்பணித் துறை அமைச்சகம் (KKR) அறிவிக்கும் என்று ஒற்றுமை அரசின் பேச்சாளர் டத்துக் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்த முயற்சி பண்டிகைக் காலத்தில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணத்தை சிறப்பாக திட்டமிட உதவும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி கூறியுள்ளார்.
“இந்த முயற்சி மக்களின் பயணச் செலவைக் குறைப்பதோடு, பண்டிகை காலத்தில் தங்களின் பயணத்தைச் சரியாகத் தீர்மானிக்கவும் உதவும்.
இது தொடர்பான முழுமையான விவரங்களை பொதுப்பணித் துறை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும்,” என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 4:50 pm
HRD Corp-ல் அதிரடி நடவடிக்கை: மூன்று மூத்த நிர்வாகிகள் பணியிலிருந்து இடைநீக்கம்
February 6, 2026, 3:51 pm
துன் டாக்டர் மகாதீர் வீட்டில் தங்க மருத்துவர்கள் அனுமதி
February 6, 2026, 3:47 pm
சைரன் வைத்த MPV வாகனம் அரசுக்குச் சொந்தமானது
February 6, 2026, 2:43 pm
ஆலயங்கள் தொடர்பான பேரணி 3ஆர் சட்டத்திற்கு எதிரானது; அனுமதி வழங்கக்கூடாது: டத்தோ சிவக்குமார்
February 6, 2026, 2:05 pm
செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம்; முழுமையாக கருங்கல்லில் கட்டப்படும்: சுரேந்திரன்
February 6, 2026, 2:04 pm
தினமும் சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: டத்தோஸ்ரீ ரமணன்
February 6, 2026, 12:58 pm
காசநோய்ப் பரவல்: 33 பேருக்கு தொற்று உறுதி
February 6, 2026, 12:32 pm
