செய்திகள் மலேசியா
தினமும் சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: டத்தோஸ்ரீ ரமணன்
பெட்டாலிங் ஜெயா:
சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் தங்களின் தினசரி எல்லைத் தாண்டிய பயணங்களின் போதும் காப்பீடு செய்யப்படுவதை உறுதி செய்ய புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.
மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
ஜொகூரிலிருந்து தினமும் எல்லை தாண்டிச் செல்லும் சுமார் 400,000 மலேசியர்கள், வேலை நேரத்திற்குப் பிறகு சமூகப் பாதுகாப்புப் பாதுகாப்பிலிருந்து விடுபடாமல் இருப்பதை இந்தப் புதிய திட்டம் உறுதி செய்யும்.
உங்கள் பணியிடத்திலிருந்து வீட்டிற்குப் பயணம் செய்யும்போது என்ன நடக்கும்? அந்த நேரத்தில் காப்பீடு எங்கே இருக்கிறது? அந்தப் பாதுகாப்பு தற்போது வழங்கப்படவில்லை.
எனவே மலேசியா, சிங்கப்பூர் இடையே முன்னும் பின்னும் செல்லும் தொழிலாளர்களுக்காக நாங்கள் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று டத்தோஸ்ரீ ரமணன் தெ ஸ்டார் இதழுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் தனது முக்கிய முன்னுரிமைகளில் இதுவும் ஒன்று.
சிங்கப்பூரில் பணிபுரிகிறார்கள் என்பதற்காக தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது.
நீங்கள் மலேசியாவைச் சேர்ந்தவராக இருக்கும் வரை, அதே தரத்திலான பாதுகாப்பு உங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
சுமார் 1.18 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 300,000 முதல் 400,000 பேர் தினமும் எல்லை கடந்து பயணம் செய்கின்றனர்.
அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் தரநிலைகளுக்கு ஏற்ப 26 தொடர்புடைய சட்டங்கள் திருத்தப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை சட்டத் திருத்தம் 2025 இறுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்றும் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையினரின் கருத்துக்களைப் பெற இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் (Moratorium) வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
நாங்கள் தொழிலாளர்களுக்காக இருக்க வேண்டும், அதே நேரத்தில் முதலாளிகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவர்கள் அதிகமாக நெருக்கப்பட்டால், தொழிலாளர்கள் வேலையை இழக்க நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 3:51 pm
துன் டாக்டர் மகாதீர் வீட்டில் தங்க மருத்துவர்கள் அனுமதி
February 6, 2026, 3:47 pm
சைரன் வைத்த MPV வாகனம் அரசுக்குச் சொந்தமானது
February 6, 2026, 2:43 pm
ஆலயங்கள் தொடர்பான பேரணி 3ஆர் சட்டத்திற்கு எதிரானது; அனுமதி வழங்கக்கூடாது: டத்தோ சிவக்குமார்
February 6, 2026, 2:05 pm
செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம்; முழுமையாக கருங்கல்லில் கட்டப்படும்: சுரேந்திரன்
February 6, 2026, 12:58 pm
காசநோய்ப் பரவல்: 33 பேருக்கு தொற்று உறுதி
February 6, 2026, 12:32 pm
மூன்று வாகனங்கள் மோதிய விபத்து: டாக்சி ஓட்டுநர் பலி, நால்வர் காயம்
February 6, 2026, 12:28 pm
மூன்று வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உயிரிழந்தது
February 6, 2026, 11:21 am
