செய்திகள் மலேசியா
சைரன் வைத்த MPV வாகனம் அரசுக்குச் சொந்தமானது
கோலாலம்பூர்:
நெடுஞ்சாலையில் சைரன், வழிகாட்டி விளக்குகளைப் பயன்படுத்தி ஓடியதாக பதிவான பல்நோக்கு வாகனம் (MPV), அந்த எச்சரிக்கை சிக்னல்களை பயன்படுத்துவதற்குச் சாலை போக்குவரத்து துறை (JPJ)யின் அனுமதியைப் பெற்றிருந்தது.
அந்த MPV-யையும் அதன் உரிமையாளரையும் போலீசார் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகக் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறையின் (JSPT) தலைவர், உதவி ஆணையர் முஹம்மத் ஜம்சுரி முஹம்மத் இசா தெரிவித்தார்.
விசாரணையில் அந்த வாகனம் சைரன், எச்சரிக்கை விளக்குகளைப் பயன்படுத்த JPJ-யின் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றுள்ளது என உறுதி செய்யப்பட்டது.
“இந்த வாகனம் ஒரு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பணிக்காகப் பயன்படுத்தப்படும் வாகனமாகும்.
‘பீக்கன்’ (beacon), சைரன் பயன்பாட்டிற்கு JPJ தலைமை இயக்குநரின் அனுமதி பெற்றுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், அந்த வாகனத்தை விரைவில் விசாரணைக்காக வரவழைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று, ஒரு நெடுஞ்சாலையில் சைரன், வழிகாட்டி விளக்குகளை இயக்கி சென்ற MPV வாகனத்தின் ஒரு நிமிடம் மூன்று விநாடிகள் நீளமான காணொலி இணையத்தளத்தில் வைரலானதைத்த தொடர்ந்து போலீசார் தேடி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அந்த வீடியோவில் காணப்படும் வாகனத்தின் பதிவு எண் தெளிவாகத் தெரியவில்லை என்றும் முஹம்மத் ஜம்சுரி கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 5:12 pm
சீனப் புத்தாண்டு பரிசாக சுங்கக் கட்டண தள்ளுபடி: மக்களுக்கு அரசு நற்செய்தி
February 6, 2026, 4:50 pm
HRD Corp-ல் அதிரடி நடவடிக்கை: மூன்று மூத்த நிர்வாகிகள் பணியிலிருந்து இடைநீக்கம்
February 6, 2026, 3:51 pm
துன் டாக்டர் மகாதீர் வீட்டில் தங்க மருத்துவர்கள் அனுமதி
February 6, 2026, 2:43 pm
ஆலயங்கள் தொடர்பான பேரணி 3ஆர் சட்டத்திற்கு எதிரானது; அனுமதி வழங்கக்கூடாது: டத்தோ சிவக்குமார்
February 6, 2026, 2:05 pm
செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம்; முழுமையாக கருங்கல்லில் கட்டப்படும்: சுரேந்திரன்
February 6, 2026, 2:04 pm
தினமும் சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: டத்தோஸ்ரீ ரமணன்
February 6, 2026, 12:58 pm
காசநோய்ப் பரவல்: 33 பேருக்கு தொற்று உறுதி
February 6, 2026, 12:32 pm
மூன்று வாகனங்கள் மோதிய விபத்து: டாக்சி ஓட்டுநர் பலி, நால்வர் காயம்
February 6, 2026, 12:28 pm
