நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாக்டர் மகாதீர் வீட்டில் தங்க மருத்துவர்கள் அனுமதி

பெட்டாலிங் ஜெயா:

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இடுப்பு எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு மருத்துவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

அவர் தினமும் இரவு வீட்டிற்குச் செல்ல அனுமதி உண்டு; அடுத்த நாள் மீண்டும் சிகிச்சைக்காகத் தேசிய இருதய நிறுவனத்திற்குத் (IJN) திரும்பிச் செல்ல வேண்டும் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

“தற்போது, IJN மருத்துவ குழு அவரது நிலை திருப்திகரமாக உள்ளதாக அறிவித்துள்ளது.

அவர் வீட்டிற்குச் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டாலும், மகாதீர் IJN மருத்துவ குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார்,” என அவரது அலுவலகத்தின் பேச்சாளர் சுபி யூசுப் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தற்போதைக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாருக்கும் அவரை காண அனுமதி இல்லை.

மகாதீர் ஜனவரி 6-ஆம் தேதி காலை நடைபயிற்சி செய்யும் போது கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஃபிசியோதெரபி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1989 மற்றும் 2007-ஆம் ஆண்டு அவருக்கு இருதய 'பை பாஸ்' அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset