செய்திகள் மலேசியா
HRD Corp-ல் அதிரடி நடவடிக்கை: மூன்று மூத்த நிர்வாகிகள் பணியிலிருந்து இடைநீக்கம்
கோலாலம்பூர்:
மனிதவள மேம்பாட்டு கழகம் (HRD Corp), தேசிய கணக்காய்வு குழு (PAC), தேசிய தலைமை கணக்காய்வாளார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், மூன்று மூத்த நிர்வாக அதிகாரிகளைப் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
'பயன்படுத்தப்படாத வரிகளை' நிர்வகித்தல், 'Menara Ikhlas'- யைக் கையகப்படுத்துதல், HRD கார்ப்பரேஷனின் பங்கு முதலீடுகளை நிர்வகித்தல் தொடர்பான பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக HRD Corp இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், RM14 மில்லியன் மதிப்புள்ள புதிய மைய அமைப்பு (New Core System – NCS) மூன்று முறை பயனர் ஏற்பு சோதனையில் (UAT) தோல்வியடைந்ததால், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமானது தொடர்பான சமீபத்திய கண்டுபிடிப்புகளையும் இது உள்ளடக்கியுள்ளது.
நிர்வாகத்தை மீட்டெடுப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகள், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனின் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளன என்று மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஷமிர் அஜீஸ் கூறியுள்ளார்.
“இது, HRD Corp நிர்வாக முதலாளிகளுக்கும் நாட்டின் தொழிலாளர்களுக்கும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், ‘MADANI Bekerja’ கொள்கைக்கு இணங்கவும் மேற்கொள்ளப்படுகிறது,” என்றார் அவர்.
இடைநிறுத்தப்பட்ட மூன்று அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
HRD Corp தெளிவான வரம்புகள், விதிமுறைகளுடன் வெளிப்படையான, நேர்மையான உள்நிலை விசாரணையை மேற்கொள்ளும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இந்த விசாரணையில் ஆவணங்கள், நிதிப் பதிவுகள், ஒப்புதல்கள், கூட்ட முடிவுகள், தொடர்புடைய தணிக்கைச் சுவடுகள் ஆகியவை பரிசீலிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து விளக்கங்கள் பெறப்பட்டு உண்மைகள் உறுதிப்படுத்தப்படும்,” என்றார் அவர்.
அதே அறிக்கையில், புதிய தலைமை நிர்வாக அதிகாரி பதவியேற்ற முதல் வாரத்திலேயே, நிலுவையில் இருந்த கட்டமைக்கப்பட்ட முதலீட்டு தொகுப்பின் சுமார் 18 சதவீதம் தீர்வு காணப்பட்டு, RM151.8 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் HRD Corp மேற்கொண்ட முதலீடுகள் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் உள்ளன என்பதை உறுதி செய்ய முடிந்தது.
மேலும், நிர்வாக கண்காணிப்பை வலுப்படுத்துவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி திட்டங்கள், அனுமதி கிடைத்த தேதியிலிருந்து குறைந்தது 21 நாட்கள் முதல் மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்தக் கால அவகாசம், இடம் முன்பதிவு, பங்கேற்பாளர் பதிவு மற்றும் தளவாட ஒருங்கிணைப்பு போன்றவற்றை சிறப்பாக திட்டமிட உதவும்.
தற்போது, பயிற்சி திட்டங்களின் கண்காணிப்பு முறையாக இல்லாததால், நிர்வாகக் கட்டுப்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டது.
அனுமதி பெறுவதற்கு முன்பே பயிற்சிகள் நடத்தப்பட்டு, பின்னர் மானிய விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பிரச்சினைகளைச் சமாளிக்க, HRD Corp படிப்படியாக கண்காணிப்பு, அமலாக்க அமைப்புகளை வலுப்படுத்தி, பயிற்சி நடைபெறும் இடங்களில் அதிகாரிகளை நியமிக்கும் என தெரிவித்தது.
“இந்த மேம்பாடுகள், மலேசிய MADANI கொள்கையின் நலன், சமூக நீதி, அதிகாரமளிப்பு, மனிதநேயக் கோட்பாடுகளுக்கு ஏற்ப, பொறுப்புணர்வு மிக்க நல்ல நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும்,” என்று HRD Corp தெரிவித்தது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 5:12 pm
சீனப் புத்தாண்டு பரிசாக சுங்கக் கட்டண தள்ளுபடி: மக்களுக்கு அரசு நற்செய்தி
February 6, 2026, 3:51 pm
துன் டாக்டர் மகாதீர் வீட்டில் தங்க மருத்துவர்கள் அனுமதி
February 6, 2026, 3:47 pm
சைரன் வைத்த MPV வாகனம் அரசுக்குச் சொந்தமானது
February 6, 2026, 2:43 pm
ஆலயங்கள் தொடர்பான பேரணி 3ஆர் சட்டத்திற்கு எதிரானது; அனுமதி வழங்கக்கூடாது: டத்தோ சிவக்குமார்
February 6, 2026, 2:05 pm
செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம்; முழுமையாக கருங்கல்லில் கட்டப்படும்: சுரேந்திரன்
February 6, 2026, 2:04 pm
தினமும் சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: டத்தோஸ்ரீ ரமணன்
February 6, 2026, 12:58 pm
காசநோய்ப் பரவல்: 33 பேருக்கு தொற்று உறுதி
February 6, 2026, 12:32 pm
