நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம்; முழுமையாக கருங்கல்லில் கட்டப்படும்: சுரேந்திரன்

கோலாலம்பூர்:

செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் முழுமையாக கருங்கல்லில் கட்டப்படும்.

ஆலயத் தலைவர் சுரேந்திரன் இதனை கூறினார்.

செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் 100 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஆலயமாகும்.

மலேசியாவைத் தவிர்த்து அனைத்துலக ரீதியில் புகழ் பெற்ற ஆலயமாக இது விளங்குகிறது.

இந்நிலையில் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலயத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதை தொடர்ந்து ஆலயத்தில் பாலாஸ்தான வைபவமும் நடைபெறவுள்ளது என்று அவர் கூறினார்.

புகழ் பெற்ற செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் முழுமையாக கருங்கல்லில் கட்டப்படவுள்ளது.

குறிப்பாக ஆலயத்தில் உள்ள மரமும், காளியம்மன் சிலையும் ஒன்றும் செய்யப்படாது.

ஆனால் காளியம்மன் சிலை தற்காலிகமாக மூடப்படவுள்ளது. திருப்பணிகள் முடியும் வரை அம்மன் சிலை சிலை வழிபாட்டிற்கு திறக்கப்படாது.

அதே வேளையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆலயத்தில் திருவிழாவும் நடத்தப்படாது.

ஆகவே ஆலய நிர்வாகத்தின் இந்த முடிவை பக்தர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆலய திருப்பணிக்கும் பக்தர்கள் உதவ முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset