செய்திகள் மலேசியா
ஆலயங்கள் தொடர்பான பேரணி 3ஆர் சட்டத்திற்கு எதிரானது; அனுமதி வழங்கக்கூடாது: டத்தோ சிவக்குமார்
பத்துமலை:
ஆலயங்கள் தொடர்பான பேரணி 3ஆர் சட்டத்திற்கு எதிரானது. ஆக இப்பேரணிக்கு அரசாங்கமும் போலிஸ்படையும் அனுமதி வழங்கக்கூடாது.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.
ஆலயங்களுக்கு எதிரான பேரணி தான் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளது.
இந்த பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது.
இருந்தாலும் இப்பேரணி நடத்தப்படும் என உறுதியாக கூறப்படுகிறது.
மஹிமாவை பொறுத்த வரையில் நல்ல விஷயத்திற்காகவும் கோரிக்கைகளுக்காகவும் பேரணி நடத்துவது அவசியம்.
ஆனால் இந்த பேரணி ஆலயங்களுக்கு எதிரானது. குறிப்பாக இந்த பேரணி 3ஆர் சட்டத்திற்கு எதிரானது.
ஆக இந்த பேரணிக்கு அரசாங்கம் எந்தவொரு அனுமதியும் வழங்கக்கூடாது.
மேலும் இப்பேரணிக்கு யாரும் செல்லக்கூடாது என அரசு தடை விதிக்க வேண்டும். இதுவே மஹிமாவின் கோரிக்கையாக உள்ளது.
நாட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் இப்பேரணி நடைபெறாது என மஹிமா நம்புகிறது.
ஆனால் பேரணி நடத்தால் அதில் இந்து சமயமும் ஆலயமும் குறித்து அவர்கள் பேசக்கூடாது.
மீண்டும் மீண்டும் அடிக்க இந்துக்கள் மெத்தைகள் அல்ல. எங்களுக்கு உணர்ச்சிகள் உள்ளது.
இதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 5:12 pm
சீனப் புத்தாண்டு பரிசாக சுங்கக் கட்டண தள்ளுபடி: மக்களுக்கு அரசு நற்செய்தி
February 6, 2026, 4:50 pm
HRD Corp-ல் அதிரடி நடவடிக்கை: மூன்று மூத்த நிர்வாகிகள் பணியிலிருந்து இடைநீக்கம்
February 6, 2026, 3:51 pm
துன் டாக்டர் மகாதீர் வீட்டில் தங்க மருத்துவர்கள் அனுமதி
February 6, 2026, 3:47 pm
சைரன் வைத்த MPV வாகனம் அரசுக்குச் சொந்தமானது
February 6, 2026, 2:05 pm
செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம்; முழுமையாக கருங்கல்லில் கட்டப்படும்: சுரேந்திரன்
February 6, 2026, 2:04 pm
தினமும் சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: டத்தோஸ்ரீ ரமணன்
February 6, 2026, 12:58 pm
காசநோய்ப் பரவல்: 33 பேருக்கு தொற்று உறுதி
February 6, 2026, 12:32 pm
மூன்று வாகனங்கள் மோதிய விபத்து: டாக்சி ஓட்டுநர் பலி, நால்வர் காயம்
February 6, 2026, 12:28 pm
