செய்திகள் மலேசியா
அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் தான் பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கு முக்கிய காரணம்: குணராஜ்
கோலாலம்பூர்:
அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் தான் பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் தைப்பூச நடவடிக்கைக் குழு தலைவருமான குணராஜ் கூறினார்.
பத்துமலை தைப்பூச கொண்டாட்டம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதி செய்த அனைத்து அமலாக்க அதிகாரிகள், அவசர சேவை தன்னார்வலர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
தைப்பூசம் இந்துக்களுக்கு ஒரு புனிதமான பண்டிகை. இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் வெற்றி பெற ஒத்துழைத்தவர்களின் அனைத்து தரப்பினரின் தொழில்முறை, அர்ப்பணிப்பு, தியாகத்தை பிரதிபலிக்கிறது.
திருவிழா காலம் முழுவதும், கூட்டக் கட்டுப்பாடு, போக்குவரத்து, பாதுகாப்பு, மருத்துவ சேவைகள், கோவில் தூய்மையை நிர்வகிக்க பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள் அணி திரட்டப்பட்டனர்.
குறிப்பாக பிரதான ஊர்வலப் பாதையிலும் பத்துமலை சுற்றியும் போக்குவரத்தை கட்டுப்படுத்தி, பாதுகாப்பாக செயல்பட்ட போலிஸ்படைக்கும் எனது பாராட்டுகள்.
ஆலயப் பகுதியில் அவர்களின் தயார்நிலை, தொடர்ச்சியான ரோந்துப் பணிக்காக மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறைக்கும் எனது நன்றிகள்.
குறிப்பாக உடனடி மருத்துவ உதவியை வழங்கிய மலேசிய செஞ்சிலுவைச் சங்கம், செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ், மருத்துவமனை அவசர குழுக்கள் உள்ளிட்ட மருத்துவக் குழு, சுகாதாரத் தன்னார்வலர்களுக்கும் எனது பாராட்டுகள்.
வியாபாரிகளைக் கண்காணித்துடன், பத்துமலை பகுதியின் தூய்மையை உறுதி செய்த செலாயாங் நகராண்மைக் கழகத்தின் சேவை அளப்பரியது.
மேலும் பத்துமலைக்கு வருகை தருபவர்களுக்கு வசதியாக இலவச சேவைகளை வழங்கிய கேடிஎம்பி நிறுவனத்தை மறக்க முடியாது.
இந்து அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் தன்னார்வலர்கள் அயராது உழைத்ததற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக தூய்மையைப் பராமரித்தல், மக்கள் வருகையை நிர்வகித்தல், பக்தர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குதல், அமலாக்க நிறுவனங்களின் முயற்சிகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகித்த தைப்பூச நடவடிக்கை குழு தன்னார்வலர்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.
தன்னார்வலர்கள் தண்ணீர், இலவச உணவுக் கடைகள், பொருட்களை எடுத்துச் செல்லவும் பக்தர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவினர்.
பல்வேறு தரப்பினரும் ஒருவருக்கொருவர் உதவ கைகோர்த்தபோது மலேசியர்களிடையே ஒத்துழைப்பின் உணர்வு தெளிவாகத் தெரிந்தது.
இதன் அடிப்படையில் 2026 தைப்பூச கொண்டாட்டத்தை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் எனது நன்றி.
இந்த ஆண்டு தைப்பூச கொண்டாட்டத்தின் வெற்றி, ஒவ்வொரு அதிகாரி, தன்னார்வலர், பக்தரின் அர்ப்பணிப்பின் விளைவாகும் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 4:14 pm
நாட்டில் கடுமையான புகைமூட்டம்: 400ஐ தாண்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும்
September 5, 2026, 2:33 pm
அன்வார் - ஜாஹித் இடையிலான உறவு மேலும் பிளவுபடுகிறது: புளூம்பர்க்
September 5, 2026, 2:32 pm
பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு; இரு தலைவர்களும் விவாதிக்கட்டும்: ஜொஹாரி
September 5, 2026, 2:30 pm
மலேசிய ஜெயம் பொது ஓட்டப் போட்டி: நாடு முழுவதிலிருந்து 350 போட்டியாளர்கள் பங்கேற்பு
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 11:03 am
